• Jul 25 2025

மீண்டும் நடிக்கவரும் விஜயகாந்தின் மகன்.. அதுவும் இந்த மாஸ் இயக்குநரோடு இணைகின்றாரா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இனிக்கும் இளமை என்ற திரைப்படத்தில் நடித்து தன் திரைப் பயணத்தை ஆரம்பித்தவர் கேப்டன் விஜயகாந்த். தொடர்ந்து சட்டம் ஒரு இருட்டறை, தூரத்து இடிமுழக்கம், உழவன்மகன் போன்ற வெற்றிப் படங்களை கொடுத்து தமிழில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தார்.

இவர் கிட்டத்தட்ட 150 திரைப்படங்கள் மேலாக நடித்துள்ளார் இவ்வாறு சினிமாவில் பிசியாக கலக்கி வந்த கேப்டன் விஜயகாந்த் பின்னர் அரசியலில் இணைந்தார். அரசியலில் முழுமூச்சாக ஈடுபட்டிருந்த வேளையில் நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டார். இதனால் தற்பொழுது அரசியலிலும் இருந்து ஓய்வெடுத்துள்ளார்.இவருக்கு இரு மகன்கள் என்பதை நாம் அறிவோம்.

இதில் சண்முக பாண்டியன் தனது தந்தையை போலவே சினிமாவில் கதாநாயகனாக களமிறங்கினார். இவர் நடித்த படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.


இதன்பின் படங்களில் நடிக்காமல் இருந்த சண்முக பாண்டியன், தற்போது மீண்டும் வெப் சீரிஸ் மூலம் நடிக்க வந்துள்ளார்.

அத்தோடு வேல ராமமூர்த்தி எழுதிய குற்றப் பரம்பரை நாவல் தற்போது வெப் சீரிஸாக உருவாகிறது. நடிகரும், இயக்குநருமான சசி குமார் இந்த வெப் சீரிஸை இயக்குகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வெப் சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் மீண்டும் நடிக்க வருகிறார். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement