• Jul 23 2025

அஜித்துடன் மோதுவது பற்றி விஜய் சொன்ன பதில்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

அஜித் மற்றும் விஜய் தான் போட்டியாளர்களாக தமிழ் சினிமாவில் கருதப்படுகிறார்கள். இருப்பினும் அவர்கள் கடந்த பல வருடங்களாக நேருக்கு நேர் பாக்ஸ் ஆபிசில் மோதவில்லை. 

ஆனால் அது வரும் பொங்கலுக்கு நடக்க உள்ளது. அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு ஆகிய படங்கள் நேரடியாக மோதுகின்றன.

இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் இது பற்றி தற்போதே சமூக வலைத்தளங்களில் மோதலில் இறங்கி இருக்கிறார்கள்.

அத்தோடு பொங்கலுக்கு வாரிசு ரிலீஸ் ஆகும் நிலையில் துணிவும் போட்டிக்கு வருவது பற்றி பிரபல நடிகர் ஷாமிடம் போனில் விஜய் பேசி உள்ளார்.

"வரட்டும்.. நம்ம நண்பர் தானே, அவர் படமும் நல்லா போகட்டும், நம்ம படமும் நல்லா போகட்டும்" என விஜய் கூறினாராம்.



மேலும் இது தான் தளபதிக்கு இருக்கும் மனசு என ஷாம் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார். 


Advertisement

Advertisement