• Jul 25 2025

"வயசானாலும் அப்பா அப்பா தான்".. அஜித் தந்தைக்கு இரங்கல் தெரிவித்த விஜய் தந்தை..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் உச்ச நாயகனான அஜித்குமார் தந்தை இன்று காலை உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். அவரின் இறப்பினைத் தொடர்ந்து நேரில் சென்று பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


அதுமட்டுமல்லாது இணையத்திலும் தங்களுடைய இரங்கலை பகிர்ந்து வருகிறார்கள். இந்நிலையில் அஜித்தின் நெருங்கிய நண்பனான விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ் ஏ சந்திரசேகர் பிரபல ஊடகம் ஒன்றிற்கு ஆடியோ கால் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார். 


அந்தவகையில் அவர் கூறுகையில் "நடிகர் அஜித் குமார் அவர்களின் தந்தையுடைய மறைவு கேட்டு வருத்தப்படுகிறேன். வயசானாலும் அப்பா அப்பா தான், அந்த இழப்பு மகனுக்கு எவ்வளவு பெரிதாக இருக்கும் என்று எல்லா பிள்ளைகளுக்கும் தெரியும்.

அப்படி தந்தையை இழந்து தவித்துக்கொண்டிருக்கும் அஜித்குமாருக்கு கடவுள் மனஆறுதலை தரவேண்டும் என்று எல்லாம்வல்ல இறைவனிடம் கேட்டுக்கொள்கிறேன். மேலும் பெங்களூரில் இருந்து இப்போது தான் வந்திருக்கிறேன்" எனவும் கூறி இரங்கல் தெரிவித்துள்ளார் விஜய் தந்தை.


அத்தோடு அஜித் தந்தை இறந்ததாக தனக்கு இப்பத்தான் போன் வந்ததாகவும் விஜய் தந்தை அதில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement