• Jul 29 2025

80 வயது பூர்த்தியைக் கொண்டு கோவிலில் பூஜை செய்த விஜய்யின் தந்தை- நெட்டிசன்கள் கடும் விமர்சனம்

Aishu / 3 years ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய்யின் அப்பா எஸ்ஏ சந்திரசேகர் சில தினங்களுக்கு முன்பு தனது 80வது பிறந்தநாளை கொண்டாடினர். அப்போது அவர் தனது மனைவி உடன் மட்டும் கேக் வெட்டி கொண்டாடி இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

விஜய் பெற்றோரை முதுமையில் இப்படி தவிக்க விட்டுவிட்டாரே என நெட்டிசன்கள் அதிகம் விமர்சித்து இருந்தனர். இந்நிலையில் நேற்று திருக்கடையூர் அமிர்தகடேஷ்வரர் கோவிலுக்கு வந்து ஆயுள் விருத்தி ஹோமம் செய்து வழிபட்டனர்.

ஆனால் விஜய் இதற்கும் வரவில்லை. மேலும் அவர் மகனுக்குரிய கடமைகளை கடமைகளை செய்யாமல் படங்களில்/பேட்டிகளில் மட்டுமே அப்பா சென்டிமென்ட் பற்றி கதை கதையாக சொல்கிறார் என நெட்டிசன்கள் தற்போது விஜய்யை தாக்கி பேசி வருகின்றனர்.

அத்தோடு விஜய்யின் கெரியரில் இந்த நிலையில் இருக்க முக்கிய காரணமான அப்பாவையே இப்படி விட்டுவிட்டாரே என்றும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் விஜய் மற்றும் அவரது அப்பா எஸ்ஏசி இடையே சமீப காலமாக பிரச்சனை இருக்கிறது என்றும், அவர்கள் பேசிக்கொள்வது இல்லை என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement