• Jul 26 2025

ரயிலில் 40பேரால் தாக்கப்பட்ட விஜய்.. காயத்துடன் வந்த நண்பர்கள்...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் 'வாரிசு' பட வெற்றியைத் தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'லியோ' படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை லலித் குமார் பிரமாண்டமாக தயாரித்து வருகிறார். இப்படத்தின் உடைய படப்பிடிப்புகள் ஆரம்பமாகி காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

விஜய்யின் அன்ஸீன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எது கிடைத்தாலும் ரசிகர்கள் அதனை வைரலாக்கி விடுவார்கள். அந்தவகையில் விஜய் பல ஆண்டுகளுக்கு முன் கொடுத்த பேட்டி ஒன்றில் தனது கல்லூரி வாழ்க்கையில் நடந்த சண்டை பற்றிப் பேசியுள்ளார்.


அதாவது "நானும் என்னயுடைய நண்பர்கள் மற்றும் தோழிகள் அனைவரும் சேர்ந்து காலேஜ் நேரத்தில் டூர் சென்றிருந்தோம். நாங்கள் ரயிலில் சென்று கொண்டிருந்த நேரத்தில் இரு நபர்கள் வந்து எங்களுடைய தோழிகளை டீஸ் செய்தார்கள். இதனால் நாங்கள் கடுப்பாகி அவர்களை தாறுமாறாக அடித்துவிட்டோம்.


இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் அடுத்த ஸ்டேஷனில் அவர்களுடைய 40 நண்பர்களுடன் காத்திருந்து ரயிலில் புகுந்து எங்களை தாக்கினார்கள். எங்களை போட்டு பலமாக அடித்தார்கள். என்னுடைய நண்பர்கள் சிலர் கட்டுடன் தான் அந்த ரயிலில் இருந்து கீழே இறங்கினார்கள்' என விஜய் சிரித்தபடி கூறியுள்ளார்.


இவரின் இந்த வீடியோ ஆனது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement