• Jul 26 2025

ரஜினி நடித்த சந்திரமுகியுடன் ஒன்றாக வெளியான விஜய்யின் சச்சின் - படம் வெற்றியா? தோல்வியா?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக  வலம் வருபவர் விஜய். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகின்றார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.

இதைத்தொடர்ந்து லியோ படத்தின் படப்பிடிப்பே இன்னும் முடியாத நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை பற்றிய பேச்சு தற்போது பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. வாரிசு படத்தை தொடர்ந்து விஜய் மேலும் ஒரு தெலுங்கு இயக்குனரின் படத்தில் நடிக்கப்போவதாக பேசப்பட்டு வருகின்றது. வீர சிம்ஹா ரெட்டி என்ற படத்தை இயக்கிய கோபிசந்த் இயக்கத்தில் விஜய் தன் 68 ஆவது படத்தில் நடிப்பதாக சொல்லப்படுகின்றது.

மறுபக்கம் விஜய் மற்றும் அட்லீயின் காம்போ மீண்டும் இணையப்போவதாக தகவல்கள் வருகின்றன.

இந்நிலையில் விஜய்யின் படத்தை தயாரிக்க தற்போது பலர் போட்டிபோட்டு வரும் நிலையில் விஜய்யை வைத்து பல படங்களை தயாரித்த தாணு சமீபத்தில் சச்சின் படத்தை பற்றி பேசியுள்ளார்.

ஜான் மகேந்திரன் இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான சச்சின் திரைப்படம் அந்த சமயத்தில் வரவேற்பை பெறவில்லை என்றாலும் தற்போது பலராலும் கொண்டாடப்படும் படமாக இருக்கின்றது. விஜய் மீண்டும் சச்சின் போல ஒரு படத்தில் நடிக்கவேண்டும் என அவரது ரசிகர்களின் ஆசையாக இருக்கின்றது.

அந்த அளவிற்கு விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பொதுவான ரசிகர்களுக்கும் பிடித்த படமாக சச்சின் இருந்து வருகின்றது. ஆனால் இப்படம் தோல்வி படம் என சிலர் பேசி வர, அப்படத்தை தயாரித்த தாணு, சச்சின் படம் வெற்றிப்படம் தான். நூறு நாட்களுக்கு மேல் அப்படம் ஓடியது.

ஆனால் சச்சின் படத்துடன் ரஜினியின் சந்திரமுகி படமும் வெளியானதால் சச்சினின் வெற்றி பெரிதாக தெரியவில்லை என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement