• Jul 25 2025

காதலர் தினத்தன்று தனது காதலியை அறிமுகம் செய்த விக்ரம் பட நடிகர்.! வைரலாகும் கியூட் போட்டோஸ்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

உலக நாயகன்கமலஹாசன்  நடிப்பில் வெளியாகி மிக்பெரிய வெற்றி பெற்ற ‘விக்ரம்’ படத்தில், கமலுக்கு மகனாக நடித்த நடிகர் காளிதாஸ் ஜெயராம், மாடல் அழகியாகாதலர் தினன தாரிணி காலிங்கராயரை காதலிப்பதாக சில மாதங்களுக்கு முன்பு இருந்தே தகவல் ஒன்று கிசுகிசுக்கப்பட்டது.

அந்த வகையில், அவர்கள் இருவரும் ஒன்றாக துபாயில் படகு சவாரி செய்யும் பொழுது, ஒன்றாக அமர்ந்திருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துகொண்டு அவருடனான உறவை மறைமுகமாக உறுதிப்படுத்தினார். 

இந்நிலையில், காதலர் தினமான இன்று, நான் தனிமையில் இல்லை என காளிதாஸ் தனது  காதலை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

தாரிணியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்ட காளிதாஸ், “கடைசியாக நான் தனியாக இல்லை” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இதற்கிடையில், ஓணம் பண்டிகையின் போது, காளிதாஸின் பெற்றோர் மற்றும் நடிகர்களான ஜெயராம் – பார்வதி ஆகியோருடன் அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 



Advertisement

Advertisement