• Jul 26 2025

ஒருவாரத்தில் அடித்து தூக்கிய விக்ரம் -வெளியானது சூப்பர் தகவல்..!

Aishu / 3 years ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியாகி மாஸ் ஹிட் கொடுக்கும் திரைப்படம் தான் விக்ரம். இப்படம் கடந்த 3-ஆம் திகதி வெளியானது.

மேலும், இப்படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், சேம்பன் வினோத், காளிதாஸ் ஜெயராம், காயத்திரி, சம்பத்ராம், ஹரிஷ் பெறடி, ஆண்டனி வர்கீஸ், ஷிவானி, மகேஸ்வரி, மைனா, நந்தினி ஆகியோர் முதல் வேடங்களில் நடித்துள்ளனர்.மேலும், இப்படத்தில் சூர்யா கெளரவ வேடத்தில் நடித்துள்ளார்.

விக்ரம் படம், உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக பிரமாண்டமாக ரிலீசானது. கைதி, மாஸ்டர் போன்ற போன்ற ஹிட் படங்களை இயக்கி வசூல் ரீதியாகவும், வணிகரீதியாகவும் வெற்றி பெற்று மாஸ் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தை இயக்கியுள்ளார்.

இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களிலேயே இப்படம் தான் மிகப்பெரிய வெற்றிப்படம் என்றும் வசூலிலும் சாதனை செய்து வருகின்றது என்று கூறப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் விக்ரம் படம் தமிழகத்தில் மட்டும் ஒரு வாரத்தில் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துசாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement