• Jul 23 2025

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் சிங்கிள் வெளியீட்டில் கலந்துகொள்ளாத விக்ரம்… அடுத்தடுத்து ஏற்படும் சர்ச்சை!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டில் விக்ரம் கலந்து கொள்ளாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதையை, தற்போது திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் மணிரத்னம்.இவர் வித்தியாசமான கதைகளை உலகிற்கு கொடுப்பதில் கை தேர்ந்தவர்.

இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வெளியாக உள்ளது. மேலும் இப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து உள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியு, குந்தவையாக திரிஷாவும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும் நடித்துள்ளனர். இவர்களது கேரக்டர் அடங்கிய போஸ்டர்கள் மற்றும் இப்படத்தின் டீசர் ஆகியவை சமீபத்தில் வெளியாகி வைரலானது.

அத்தோடு கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்கிற நாவலை அடிப்படையாக வைத்து தான் இப்படத்தை எடுத்துள்ளார் மணிரத்னம்.மேலும் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளையும், தோட்டா தரணி கலை இயக்குனராகவும் இப்படத்தில் பணியாற்றி உள்ளனர்.

இதையடுத்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘பொன்னி நதி’ பாடல் இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது.

மேலும் இந்த நிகழ்வில் கார்த்தி, ஜெயம் ரவி மற்றும் ஜெயராம் ஆகியோர் மட்டுமே கலந்துகொண்டனர். இந்நிலையில் இந்த நிகழ்வில் படத்தின் நாயகர்களில் ஒருவரான விக்ரம் கலந்துகொள்ளாதது ஏன் என ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

ஏற்கனவே பொன்னியின் செல்வன் படக்குழு மேல் விக்ரம் அதிருப்தியாக இருப்பதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement