• Jul 24 2025

அந்நியன் பட Ideologyயை குறை சொன்ன விக்ரமன் - மோசமாக விமர்சித்து வரும் நெட்டிசன்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

இந்த வாரம் நிகழ்ச்சியில் பேண்டஸி டாஸ்க் பிக் பாஸ் கொடுத்திருந்தார். இதில் போட்டியாளர்களும் சினிமா பிரபலங்களின் கெட்டப்பில் வேடமடைந்து நடித்திருந்தார்கள்.அந்த வகையில் விக்ரமனுக்கு அன்னியன் கதாபாத்திரம் கன்னியன் என்ற பெயரில் கொடுக்கப்பட்டிருந்தது.

டாஸ்க் முடிந்து ஒவ்வொருவருக்கும் பரிசு கொடுக்கும் விழாவும் ஏற்படுத்தி இருந்தார்கள்.அப்போது யார் சரியாக செய்யவில்லை? என்று கேட்டதற்கு மணி, விக்ரமன்தான் சரியாக செய்யவில்லை. இதே எனக்கு அன்னியன் கதாபாத்திரம் கொடுத்திருந்தால் இந்நேரம் நான் கோல்ட், சில்வர் என்று ஏதாவது ஒரு மெடலைபெற்றிருப்பேன் என்று கூறியிருந்தார். 


உடனே விக்ரமன், நீங்கள் அதைப் பற்றி பேசாதீர்கள். எனக்கு அந்த கதாபாத்திரத்தில் உடன்பாடு இல்லை என்று சொல்லி ஒரு பீப் சவுண்ட் போட்ட வார்த்தை வருகிறது.அதற்கு மணியும், நீங்கள் அதைப் பற்றி எல்லாம் பேச தேவையில்லை. டாஸ்கை பற்றி மட்டும் பேசுங்கள் என்று கூற பீப் சவுண்ட் வருது. தற்போது இந்த ப்ரோமோ வீடியோ தான் வெளியாகி இருக்கிறது.இதைப் பார்த்த நெட்டிசன்கள், ஒருவேளை விக்ரமன் அந்நியன் படத்தில் வரும் பிராமணர்களை பிடிக்கவில்லை என்று தான் கூறியிருக்கிறாரோ? அதற்குதான் மணி பதிலளித்திருக்கிறாரோ? என்றும் கூறுகிறார்கள்.


அது மட்டும் இல்லாமல் கொடுத்த டாஸ்கை விக்ரமன் சரியாக செய்யவில்லை இப்படி தான் பேசுவார். ஒரு பேண்டஸி ரோலுக்கு கூட ஐடியாலஜி பத்தி பேசுறாரு என்று கூறியிருக்கிறார். இன்னொரு சிலர், அவர் எப்போதும் கருத்து தெரிவிப்பவர். அவருடைய கருத்தில் சரியாகத்தான் இருக்கிறார் என்று விக்ரமனுக்கு ஆதரவாகும் பேசியிருக்கிறார்கள். ஆக மொத்தம் நிகழ்ச்சியில் விக்ரமன் பிராமணர்களை பற்றி கூறினாரா? இல்லை மணிகண்டன் நடித்த நந்தமூரி பாலகிருஷ்ணா கதாபாத்திரத்தை பற்றி பேசி இருக்கிறாரா? என்பது தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement