• Jul 25 2025

பிக் பாஸ் 4 வின்னர் ஆரியை சந்தித்த விக்ரமன்.. வைரல் புகைப்படங்கள் இதோ!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் சமீபத்தில் ஒளிபரப்பாகி இருந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன்,இதற்கு முந்தைய சீசன்களைப் போலவே மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை. பெற்றிருந்தது. இதற்கு மிக முக்கிய காரணம் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்கி இருந்த போட்டியாளர்கள் தான்.

மொத்தம் 21 பேர் போட்டியாளர்களாக களமிறங்கி இருந்த சூழலில் மக்கள் மத்தியில் அதிக பிரபலம் இல்லாதவர்கள் கூட இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்து பட்டையை கிளப்பி இருந்தனர்.  இந்த நிகழ்ச்சியின் ஒவ்வொரு எபிசோடும் விறுவிறுப்பாக சென்றிருந்தது.

சுமார் 106 நாட்கள் நடந்த இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் டைட்டில் வின்னராக அசிம் அறிவிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து இரண்டாவது இடத்தை விக்ரமனும், மூன்றாவது இடத்தை ஷிவினும் பிடித்திருந்தார். இந்த நிகழ்ச்சி முழுக்கவே அசத்தலாக சண்டைகளுடனும், கலகலப்பாகவும், எமோஷனல் நிறைந்தும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத வகையில் சென்றதால், பலரின் பேவரைட் சீசனாகவும் மாறி இருந்தது. 

மேலும் இந்த நிகழ்ச்சியில் 2 ஆவது இடம் பிடித்திருந்த விக்ரமனும் தனக்கென ஒரு இடத்தை பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிடித்திருந்தார். மேலும், சமூகம் குறித்து பல போட்டியாளர்கள் இடையேயும் பல்வேறு விஷயங்களை பிக் பாஸ் வீட்டில் எடுத்துரைத்த விக்ரமன் பலரின் ஃபேவரைட் ஆகவும் மாறியிருந்தார்.

 இந்த நிலையில், நான்காவது பிக் பாஸ் தமிழ் சீசனில் டைட்டில் வின்னரான ஆரியை விக்ரமன் சமீபத்தில் சந்தித்ததாக தெரிகிறது.

நான்காவது பிக் பாஸ் சீசனில் தொடக்கம் முதல் இறுதி வரை மிகவும் நியாயமாகவும், சரியான வழியிலும் போய்க் கொண்டிருந்த நடிகர் ஆரி, பலரின் பேவரைட் ஆகவும் இருந்து, டைட்டில் வின்னராகவும் ஆகி இருந்தார். இதனிடையே சமீபத்தில் விக்ரமன் மற்றும் ஆரி ஆகியோர் சந்தித்துக் கொண்டது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



Advertisement

Advertisement