• Jul 25 2025

டான்ஸ் கத்துக்கொடுத்த அமுது.. Vibe ஆன விக்ரமன்...தீயாய் பரவும் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. அத்தோடு சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார்.

அத்தோடு , கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார். மேலும் இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.

இந்த Ticket To Finale டாஸ்க்கிற்கு மத்தியில் அனைத்து போட்டியாளர்களும் இறுதி சுற்றுக்கு முன்னேற முனைப்பு காட்டி போட்டியில் கடினமாக விளையாடி இருந்தனர். எனினும் அதே போல, நிறைய சண்டைகள் மற்றும் விவாதங்கள் கூட அரங்கேறி, போட்டியாளர்கள் மத்தியில் சலசலப்பை உண்டு பண்ணி இருந்தது. இருந்தாலும், அனைத்து டாஸ்க்குகளும் விறுவிறுப்பாகவும் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கடுத்து, BB Critics விருதுகள் வழங்கப்பட்டது. சில பெயரில் விருதுகள் அங்கே இருக்க, அதனை தாங்கள் விரும்பும் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற சூழலும் உள்ளதாக தெரிகிறது. இதில் ஒரு சில போட்டியாளர்கள் மற்றவர்களுக்கு கொடுக்கும் விருதுகள் காரணமாக சில அதிருப்திகள் உண்டாகி வாக்குவாதங்களை உருவாக்கி இருந்தது.

எனினும் இதனைத் தொடர்ந்து வார இறுதியில் தோன்றி இருந்த கமல்ஹாசன், கடந்த வாரம் போட்டியாளர்களின் செயல்பாடு குறித்தும் நிறைய விஷயங்களையும் பேசி இருந்தார்.எனினும் அதே போல, கடைசியில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.

இவ்வாறுஇருக்கையில், ஆறாவது பிக் பாஸ் சீசனில் கடைசி நாமினேஷன் இந்த வாரம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் அனைத்து போட்டியாளர்கள் முன்னிலையில் இந்த நாமினேஷன் அரங்கேறி இருந்தது. மேலும் இதில் "Nominated" என்ற பெயரில் ஸ்டிக்கர் ஒன்று இருக்க, அதனை தாங்கள் நாமினேட் செய்யும் போட்டியாளர் முகத்தில் நாமினேட் செய்து ஒட்டி அதற்கான காரணத்தை சொல்ல வேண்டுமென தெரிகிறது. இதில், ஷிவின், மைனா நந்தினி, விக்ரமன் உள்ளிட்டோர் அசிமை நாமினேட் செய்து அவர் முகத்தில் நாமினேட்டட் என்ற ஸ்டிக்கரை ஒட்டினர்.

மேலும் இப்படி ஒருபக்கம் பரபரப்பான சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இதனிடையே அமுதவாணன் விக்ரமனுக்கு நடனம் சொல்லிக்கொடுத்திருக்கிறார். கார்டன் பகுதியில் இருவரும் நின்றுகொண்டிருக்கின்றனர். அப்போது, நடிகர் சத்யராஜ்-ன் பாடலை விக்ரமன் பாட, அவர்போல நடனமாடுவது எப்படி என கேட்கிறார் விக்ரமன். அத்தோடு உடனடியாக அமுதவாணன் சொல்லிக்கொடுக்க இருவரும் நடனமாடுகின்றனர். ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடிகர்கள் போல நடனமாடி பலரையும் அசத்தியவர் அமுதவாணன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே அங்குவரும் ADK இருவரையும் ஆச்சர்யத்துடன் பார்க்கிறார். அப்போது, ADK," ஒரு அரசியல்வாதியை கூட்டிட்டு வந்து என்ன பண்ண சொல்லிட்டு இருக்க?. போற போக்கை பார்த்தா விக்ரமன் பெரிய ஹீரோ ஆகிடுவான் போலயே. வெள்ளை ஷர்ட் மட்டும் தான் போடுவான். இப்போ டி-ஷர்ட் லாம் போட்டு கலக்குறாப்ல. டான்ஸ் மூவ்மெண்ட்டும் நல்லா வருது" என்கிறார். இதைக்கேட்டு விக்ரமன் சிரிக்கிறார்.



Advertisement

Advertisement