• Jul 24 2025

களவாணி பட ஸ்டைலில் தனது மனைவியை திருமணம் முடித்த விமல்- இதுவரை தெரியாமல் போச்சே

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் கடந்த 2009ம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான பசங்க என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியவர் தான் விமல். இப்படத்தினைத் தொடர்ந்து களவாணி, வாகை சூடவா, கலகலப்பு ,மஞ்சப்பை ,மன்னர் வகையறா போன்ற பல படங்களில் நடித்திருக்கின்றார்.

மேலும் இவர் நடிப்பில் உருவாகியிருந்த விலங்கு திரைப்படம அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.மேலும் அண்மையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு தற்பொழுது அதிலிருந்து விடுபட்டு மீண்டும் வீட்டுக்குத் திரும்பியுள்ளார். 


நடிப்பைத் தவிர சமூ செய்வதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்.கொரோனா காலத்தில் தமது நண்பர்களுடன் இணைந்து வீதிகளில் கிருமி நாசினி எல்லாம் தெளித்து வந்தார்.இது தவிர மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளையும் செய்து வருகின்றார்.

இப்படியான நிலையில் இவரது திருமணம் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது விமல் உறவுக்காரப் பெண்ணான அக்ஷ்யா என்பவரைக் காதலித்து வந்துள்ளார். ஆனால் இவர் நடிகர் என்ற காரணத்தால் அக்ஷ்யா வீட்டில் இவர்களது திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லையாம்.


இதனால் விமல் களவாணி பட ஸ்டைலில் தனது காதலியான அக்ஷ்யாவை கும்பகோணத்திலுள்ள ஒரு முருகன் கோயிலில் திருமணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.








Advertisement

Advertisement