• Jul 25 2025

தனி சீட்டில் உட்கார்ந்து 'ஆதிபுருஷ்' படம் பார்க்கும் ஆஞ்சநேயர்... தியேட்டர்களில் ஒதுக்கப்பட்டுள்ள சீட்... வைரல் புகைப்படம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

ஓம் ரனாவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து இன்றைய தினம் திரையரங்கில் வெளியாகியுள்ள திரைப்படம் ஆதிபுருஷ். ராமாயணத்தை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளனர். இப்படத்தில் கீர்த்தி சானோன், சைஃப் அலிகான் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.


மேலும் 'ஆதிபுருஷ்' படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் திரையரங்கின் ஒரு இருக்கையை ஆஞ்சநேயருக்காக காலியாக விட போவதாக ஏற்கெனவே பட தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு ஒன்றினை விடுத்துள்ளது. ஆதிபுருஷ் படக்குழுவின் உடைய இந்த அறிவிப்பு பாராட்டுக்கள் கிடைத்தாலும், மறுபுறம் இதனை நெட்டிசன்கள் பலரும் கடுமையாக ட்ரோல் செய்தும் வந்தனர்.


இந்நிலையில், பல தடைகளை தாண்டி இந்த படம் இன்று பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகியுள்ளது. இதற்காக சொன்னபடி ஆஞ்சநேயருக்காக ஷீட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது காவி நிற துணியில் ஆஞ்சநேயர் படம் போட்ட பிரத்யேக இருக்கையை பகவான் ஆஞ்சநேயருக்காக தியேட்டர்களில் ஒதுக்கி உள்ளனர். 

இதனையடுத்து அதன் புகைப்படத்தை எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் விமர்சகர் ப்ளூ சட்டை மாறன். அந்த போஸ்ட்டுக்கு ரசிகர்கள் ஏகப்பட்ட கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். 


Advertisement

Advertisement