• Jul 24 2025

நறுக் கேள்வியால் முகத்தடி கொடுத்த வெண்ணிலா.. கலங்கி நிற்கும் சூர்யா... சாமியார் சொன்னபடி கழுத்தில் தாலி ஏறுமா..? பரபரப்பான ப்ரோமோ வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

இளைஞர்கள் ரசிக்கும் ஒரு தொடராக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது 'காற்றுக்கென்ன வேலி' சீரியல். இந்த சீரியல் முழுக்க முழுக்க கல்லூரியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் காதல், குடும்பம், எமோஷன் இடையில் கொஞ்சம் சமூக பிரச்சனை என எல்லாம் கலந்த கலவையாக இந்த சீரியல் கதை அமைந்துள்ளது. அத்தோடு இந்த சீரியலில் அடிக்கடி பரபரப்பு திருப்பங்களும் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றது.


இந்நிலையில் தற்போது ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதில் வெண்ணிலா "எதற்காக ஷிவானியை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தீங்க" எனக் கேட்கின்றார். அதற்கு சூர்யா "நீங்க பார்த்த எல்லாமே டிராமா, ஷிவானி என்னை லவ் பண்ணுற மாதிரி நடிச்சா" எனக் கூறுகின்றார்.

அதற்கு வெண்ணிலா "நீங்க போட்ட டிராமா மாதிரியே நான் ஒரு பையனோட நெருக்கமாக இருந்து, முத்தம் கொடுத்து கொஞ்சி, அவன் கூட ஜாலியாக பைக்கில் சுற்றிட்டு கடைசியாக வந்து நடிப்பிற்காக தான் என்று சொன்னால் நீங்க என்னை ஏத்துப்பீங்களா" எனக் கேட்கின்றார். 


அதைக் கேட்டதும் சூர்யா கோபத்தில் செய்வதறியாது கலங்கி நிற்கின்றார். அந்த சமயத்தில் அங்கு வந்த சாமியார் "பௌர்ணமி அன்னைக்கு இது அவ கழுத்தில் இருக்கணும், அதற்குப் பிறகு நீ இப்படி கலங்கி நிற்க வேண்டிய அவசியமே இல்லை" எனக் கூறி தாலி கயிறு ஒன்றை சூர்யாவிடம் கொடுக்கின்றார். 

இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது, இனி என்ன நடக்கப் போவது என்பதை சற்றுப் பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement