• Jul 25 2025

அறம் தோற்றது.. தீமை வென்றது இது நியாயம் இல்லாதது- அசீம் வெற்றி பெற்றதால் கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!


பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே இன்று மாலை 6 மணிக்கு பிரம்மாண்டமாக தொடங்கி உள்ளது. இதில், விக்ரமன், அசீம், ஷிவின் 3 பேரும் இறுதிப்போட்டியாளராக மேடை ஏறி உள்ளனர். பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் பிக் பாஸ் கிராண்ட் பினாலேவுக்கு வெள்ளை நிற சண்டையும் ஜீன்ஸ் பேண்ட் மற்றும் ஜெர்கினுடன் மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளார் கமல்ஹாசன்.

பிக் பாஸ் சீசன் 6 கிராண்ட் பினாலே நிகழ்ச்சிக்கு வீட்டிலிருந்து வெளியேறிய அனைத்துப்போட்டியாளர்களும், கலக்கலாக உடை அணிந்து ஸ்டைலாக வந்திருந்தார்கள். இதில் ராபர்ட் மாஸ்டர் கையில் கட்டுடன் வந்ததைப்பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து கமல் ஒவ்வொரு போட்டியாளர்களிடமும் வெளியில் இவர்களுக்கு கிடைத்த வரவேற்பு குறித்து கேட்டறிந்தார்.


பிக் பாஸ் பினாலே ஒரு பக்கம் பிரம்மாண்டமாக சென்று கொண்டு இருக்க இணையத்தில், அசீம் டைட்டிலை வென்று விட்டதாக தகவல் பரவி, இணையத்தில் ஹாஷ்டாக் டிராண்டாகி வருகிறது. பலரும் அசீமுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், பல நெட்டிசன்கள் சகபோட்டியாளரை தரக்குறைவாக பேசி அவமதித்தவர் அசீம் அவர் எப்படி வெற்றி பெற முடியும் என்று கேட்டு வருகின்றனர்.

பிக் பாஸ் பார்வையாளர்கள் பலர் அசீமுக்கு ரெட் கொடுத்து அனுப்ப வேண்டும் என்று இணையத்தில் அவருக்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்தனர். அது மட்டுமில்லாமல் கமல்ஹாசனும், அசீமை கண்டபடி திட்டி உங்கள் மகனுக்காக நீங்கள் நிச்சயம் மாற வேண்டும் என்றார். ஆனால், கடைசி வரை எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் மற்றவர்களை அவமதித்துத் தான் வந்தார் அசீம். இப்படி பட்ட ஒருவரை வெற்றி பெற செய்தது தவறான முன் உதாரணமாகிவிட்டது.


அனைவரின் கருத்துக்கு மதிப்பளித்து, பொறுமையுடனும், அமைதியுடனும் விக்ரமன் இருந்ததற்கு கிடைத்த பரிசு இதுதானா என்றும், எல்லாமே ஏமாற்று வேலை.. அறம் தோற்றது.. தீமை வென்றது என நெட்டிசன்ஸ் தங்கள் ஆதங்கத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.


Advertisement

Advertisement