• Jul 24 2025

குணசேகரனுக்கு காத்திருக்கும் ஆப்பு... புதுத் திட்டம் தீட்டிய ஜனனி... பயத்தில் முழிக்கும் விசாலாட்சி...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியல்களில் அதிகம் மக்கள் விரும்பிப் பார்க்கும் சீரியல் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது ஏனைய சீரியல்களை விடவும் ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ளது. மேலும் இந்த சீரியலானது அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை அடிக்கடி தூண்டிய வண்ணம் இருக்கின்றன.


இந்நிலையில் தற்போது இன்றைய நாளுக்குரிய ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் போலீஸ் குணசேகரனுக்கு கால் பண்ணி எங்கண்ணா இருக்கிறீங்க எனக் கேட்கின்றனர்.  குணசேகரன் என்ன விஷயம் எனக் கேட்கின்றார்.

அதற்கு போலீஸ் SKR கம்பெனி வரைக்கும் வந்திட்டுப் போகுமாறு கூறுகின்றார். பதிலுக்கு குணசேகரன் அவன் கம்பெனிக்கு நான் எதுக்கு வரணும் எனக் கேட்கின்றார். 


மறுபுறம் ஜனனி விசாலாட்சியிடம் "உங்க மகன் நம்புற மாதிரி ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி நீங்க என்னை அனுப்பி வைக்கணும் எனக் கூறுகின்றார். அதனைக் கேட்டதும் விசாலாட்சி திருட்டு முழி முழிக்கின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்திருக்கின்றது.


Advertisement

Advertisement