• Jul 24 2025

திருமண வதந்திகளுக்கு மத்தியிலும்... 11 ஆதரவற்ற பெண்களுக்கு மண வாழ்க்கை கொடுத்த விஷால்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஷால் 45 வயதினை அடையவுள்ள இவர் இன்றுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இருப்பினும் இவர் குறித்த திருமணப் பேச்சுக்கள் அடிக்கடி அடிபட்ட வண்ணம் தான் இருக்கின்றன. 

அந்தவகையில் இவர் முன்னர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமியை காதலிப்பதாக தகவல் வெளியான நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டதாகவும் கூறப்பட்டது. 


அதனைத் தொடர்ந்து பின்னர் விஷாலுக்கு ஹைதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபரின் மகள் ஒருவருடன் நிச்சயதார்த்தம் பிரமாண்டமாக நடைபெற்றது. ஆனால் திருமணம் நடைபெறாமல் நிச்சயதார்த்ததுடன் நின்று போனது. 


மேலும் சமீபத்தில் கூட விஷாலும், நடிகை அபிநயாவும் காதலிப்பதாக கூறப்படுகிறது. அதாவது வாய் பேச முடியாத காது கேளாத மாற்றுத்திறனாளியான அபிநயா  நாடோடிகள், பூஜை, குற்றம் 23, ஈசன் போன்ற பல படங்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாக விஷாலின் திருமணம் குறித்து பல பேச்சுக்கள் எழுந்தாலும் இன்றுவரை இது தொடர்பான அதிகாரப்பூர்ப அறிவிப்பு வெளியாகவில்லை. இவரின் திருமண அறிவிப்பு இன்றுவரும் நாளை வரும் எனப் பலரும் எதிர்பார்த்திருந்த வேளையிலே இவர் தற்போது 11 ஆதரவற்ற பெண்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளமை குறித்த தகவல் வெளியாகி இருக்கின்றது.

இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி இவரின் இந்த நல்ல மனசுக்கு பலரும் தமது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement