• Jul 24 2025

ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் கேள்வி கேட்டு சிக்கிய விஷ்ணு விஷால் - அவங்களுக்கு Boy Friend இருக்கிறாரு

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் விஷ்ணு விஷால்.இவர் நடிப்பில் வெளியாகிய  வெண்ணிலா கபடிக்குழு, ராட்சசன், இன்று நேற்று நாளை, முண்டாசுப்பட்டி போன்ற பல வெற்றிப் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தற்போது விஷ்ணு விஷால் மற்றும் 'பொன்னியின் செல்வன் பூங்குழலி'  ஐஸ்வர்யா லஷ்மி ஆகியோர் நடித்துள்ள 'கட்டா குஸ்தி' திரைப்படம், டிசம்பர் 2 ஆம் தேதியன்று வெளியாக உள்ளது.


செல்லா அய்யாவு இயக்கி உள்ள கட்டா குஸ்தி திரைப்படம், குஸ்தி சண்டையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது என தெரிகிறது. இந்த நிலையில் படத்தின் ப்ரமோஷனுக்காக படக்குழுவினர் பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளனர்.

இதில், கட்டா குஸ்தி திரைப்படம் குறித்தும் பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை  பகிர்ந்து கொண்டனர்.அப்போது நடிகர் விஷ்ணு விஷால் குறித்து பேசிக் கொண்டிருந்த ஐஸ்வர்யா லஷ்மி, சூட்டிங் ஸ்பாட்டில் அதிகம் கேள்வி கேட்டுக் கொண்டிருப்பார் என்றும் இது தொடர்பாக அவரது மனைவி ஜுவாலா கட்டாவிடம் நிறைய Complaint-களைத் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.

இதற்கு மத்தியில் பேசிய விஷ்ணு விஷால், "என்ன பத்தி அப்படித்தான் இருக்கும். நேத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சொன்னாங்க, விஷ்ணு வந்து ரொம்ப பழக்கம் எல்லாம் கிடையாது. கடைசி ஒரு மாசமா தான் எனக்கு தெரியும். ஆனா அதுக்குள்ள 3,000 கேள்வி கேட்டிருப்பாரு அப்படின்னு சொன்னாங்க" என்றார்.இதனைத் தொடர்ந்து, ஐஸ்வர்யா லட்சுமி பற்றி தனக்கு தெரிந்த Gossip பற்றி சொல்ல வேண்டும் என நெறியாளர் குறிப்பிட, அப்போது பேசும் விஷ்ணு விஷால், "எனக்கு என்னமோ அவங்க ரிலேஷன்ஷிப்ல இருக்காங்கன்னு மட்டும் தெரியுது.


ஏன்னா, ஷாட் முடிஞ்ச அடுத்த செகண்ட் ஒருத்தவங்க ஃபோன் எடுக்குறாங்கன்னா அதுக்கு அர்த்தமே யார்கிட்டயோ பேசிட்டு இருக்காங்கன்னு தான். இது நான் Identify பண்ண ஒரு விஷயம். இது Gossip ஆ உண்மையான்னு எனக்கு தெரியாது" என்றார்.


Advertisement

Advertisement