• Jul 24 2025

மனைவியை விவாகரத்து செய்கிறாரா விஷ்ணு விஷால்.. அட கடவுளே திருமணமாகி 2வருஷம் கூட ஆகலயே.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஷ்ணு விஷால் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் என்ற படத்தில் நடித்து வருகின்றார். இதன் படப்பிடிப்புகள் தற்போது திருவண்ணாமலையில் விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றது. 

இவர் ரஜினி என்ற பெண்ணை 2010-ம் ஆண்டு திருமணம் செய்த நிலையில் இந்த தம்பதிக்கு ஆர்யன் என்கிற மகனும் உள்ளார், சுமார் 8 ஆண்டு காலம் சேர்ந்து வாழ்ந்த இந்த ஜோடி கடந்த 2018-ஆம் ஆண்டு திடீரென விவாகரத்து செய்து பிரிந்தனர். 


இதனையடுத்து விஷ்ணு விஷால் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா என்பவரை கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 2 ஆண்டுகள் கூட முடியாத நிலையில், அவர்கள் இருவரும் விவாகரத்து செய்துகொள்ள போகிறார்களா என்கிற கேள்வி தற்போது எழத் தொடங்கி உள்ளது. 


இதற்கு முக்கிய காரணம் விஷ்ணு விஷால் தற்போது போட்ட டுவிட் தான். அதாவது இப்பதிவில் "பரவாயில்லை, மீண்டும் முயற்சித்தேன். நான் மீண்டும் தோல்வியடைந்தேன். மீண்டும் கற்றுக்கொண்டேன். கடைசி முறை தோற்றது என்னுடைய தவறு எதுவும் இல்லை... அது துரோகம் மற்றும் ஏமாற்றம்” என பதிவிட்டு வாழ்க்கை பாடம் என கேப்ஷனும் கொடுத்துள்ளார். 


இதைப்பார்த்து ஷாக் ஆன விஷ்ணு விஷால் ரசிகர்கள், அவர் இரண்டாவது மனைவியையும் விவாகரத்து செய்யப்போகிறாரா என சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

Advertisement

Advertisement