• Jul 26 2025

மனைவியுடன் மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த விஷ்ணு விஷால்- வெளியாகிய புகைப்படங்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!


வெண்ணிலா கபடிக்குழு, ராட்சசன், இன்று நேற்று நாளை, முண்டாசுப்பட்டி போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்த நடிகர் தான் விஷ்ணு விஷால். இது தவிர இவர் தானே நடித்த வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், கதா நாயகன், சிலுக்குவார்பட்டி சிங்கம் உள்ளிட்ட  படங்களையும் தயாரித்துள்ளார்.


இவருடைய நடிப்பில் இன்றைய தினம் வெளியாகியுள்ள திரைப்படம் தான் கட்டா குஸ்தி. இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி கதாநாயகியாக நடித்துள்ளார்.இந்தப்படம்  குஸ்தியைக் கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 


இந்த படத்தை விஷ்ணு விஷாலின் விஷணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனத்தோடு இணைந்து பிரபல தெலுங்கு நடிகரான ரவி தேஜாவின் ’RT டீம்வொர்க்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.இந்த படத்தை செல்லா அய்யாவு இயக்கியுள்ளார்.


இந்த படம் இன்று ரிலீஸ் ஆனதை ஒட்டி நடிகர் விஷ்ணு விஷால் & அவரது மனைவி ஜூவாலா கட்டா இணைந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். சாமி தரிசனம் செய்த பிறகு அங்கு கூடியிருந்த ரசிகர்கள் மத்தியில் புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.அந்தப் புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement