• Jul 25 2025

மறைந்த நடிகர் விவேக்கின் பூர்வீக வீடு.. பிரபல கல்வெட்டு ஆய்வாளர் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் இயக்குநர் கே.பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர் விவேக்.90 களின் பிற்பகுதியில் இருந்து  முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்த இவர் இதுவரை 150 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

 பொது வாழ்க்கையில் சுற்றுச் சூழல் ஆர்வலராகவும் பல லட்சம் மரக்கன்றுகளை நட்டு க்ரீன் குளோபல் என்ற இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றார். முன்னாள் ஜனாதிபதி மறைந்த அப்துல் கலாமின் மீது கொண்ட அதீத ஈடுபாட்டால் அவரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த இயக்கத்தை அவர் வழி நடத்தினார்.


கடந்த ஆண்டு 2021 ஏப்ரல் 17 ஆம் தேதி விவேக் மாரடைப்புக் காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் நடிகர் விவேக்கின் சொந்த கிராமத்தில் உள்ள அவரது சமாதி மற்றும் பூர்வீக வீட்டின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. 


 கல்வெட்டு ஆய்வாளர் கி. ச. முனிராஜ் வாணாதிராயன், முகநூல் பக்கத்தில் இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் பதிவை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், " பத்மஸ்ரீ விவேக் - சமாதிக் கல்வெட்டு. திரையுலகம் மட்டுமின்றி, அனைத்து தரப்பு மக்களாலும் அன்புடன் கொண்டாடப்பட்டு, நீங்காப் புகழ்பெற்ற சின்னக் கலைவாணர், பத்மஸ்ரீ விவேக் அவர்களின்  குடும்பத்தவர் புதைக்கப்பட்ட சமாதிகளில் ஒன்று 1955 ம் ஆண்டு, கார்த்திகை மாதம் 18 ம் தேதியைச் சேர்ந்தது.


ஐந்தடுக்குகளாகக் கட்டப்பட்ட இந்த சமாதியில் மேலடுக்கிலும் நடு அடுக்கிலும் எழுத்துப் பொறிப்புகள் உள்ளன. மேற்கண்ட சமாதி தெய்வத்திரு.விவேக் அவர்களின் தந்தை திரு. சிவ அங்கையாப் பாண்டியன் அவர்களின் பாட்டியாராகிய அன்னம்மாள் ஆவார்கள். இச் சமாதியில் அடங்கிய நிலம், சர்வே எண், ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement