• Jul 25 2025

புடவை கட்ட சொல்லி அட்வைஸ் பண்ண நெட்டிசன்- செம பதிலடி கொடுத்த விஜே அர்ச்சனா..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் கலக்கிவரும் தொகுப்பாளினிகளில் ஒருவர் தான் அர்ச்சனா. திருமணத்திற்கு பிறகு தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி மக்களின் பேராதரவை பெற்று வருகிறார்.

சன் டிவி, விஜய் டிவி, ராஜ் டிவி, ஜீ தமிழ் என பல தொலைக்காட்சியில் ஹிட்டான நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

1999ம் ஆண்டு கல்லூரி படிக்கும் போதே தொகுப்பாளினியாக பயணத்தை தொடங்கிய அவருக்கு சன் தொலைக்காட்சியின் இளமை புதுமை நிகழ்ச்சி ஒரு ரீச் கொடுத்தது.

அதன் பின் சில இடைவேளைக்கு பிறகு விஜய்யில் நம்ம வீட்டு கல்யாணம் நிகழ்ச்சி தொகுத்து வழங்கி வந்தார்.

இப்போது ஜீ தமிழில் சரிகமப நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.தனது வீட்டில் வராகி அம்மன் பூஜை செய்து வழிபட்ட விடியோவை இணையத்தில் பதிவு செய்துள்ளார்.

அதில் நெட்டிசன் ஒருவர் அர்ச்சனாவை பார்த்து கமெண்ட் செய்துள்ளார். நிகழ்ச்சிகளுக்கு, ரீல்ஸ் செய்யும் போதெல்லாம் பாரம்பரியமாக புடவை, வளையல், பொட்டு எல்லாம் வைக்கிறீர்கள், பூஜை செய்யும் போதும் புடவை அணியலாமே என கமெண்ட் செய்திருக்கிறார்.அதற்கு அர்ச்சனா, சில சமயங்களில் கடவுள் முன், நீங்கள் உங்கள் அடிப்படைகளில் இருக்க முடியும்.. அவளைக் கவர வேண்டிய அவசியமில்லை!! நாம் நாமாகவே இருக்கலாம் ! எளிமையானது !! மேலும் இது பார்க்கும் கண்கள் பொருத்ததே என்று பதிலளித்துள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement