• Jul 24 2025

வி.ஜே. தியாவிற்கு குழந்தை பிறந்தாச்சு-குவியும் வாழ்த்துக்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

ரசிகர்களின் பேவரைட் தொகுப்பாளினிகளில் ஒருவராக திகழ்ந்தவர் தியா மேனன். முன்னணி டிவி சேனல்களில் ஒன்றான ‘சன் டிவி’-யில் 2015-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான காமெடி கேம் ஷோ தான் ‘சூப்பர் சேலஞ்ச்’. இந்த ‘சூப்பர் சேலஞ்ச்’ கேம் ஷோவை தொகுத்து வழங்கியவர் தான் தியா மேனன் .

இதனைத் தொடர்ந்து இவர் சன் டிவிலேயே ஒளிபரப்பான இன்னொரு கேம் ஷோ ‘சவாலே சமாளி’ போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.எனினும் இதன் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் பாடல் நடனம் என்று பன்முக திறமை கொண்டவர் தியா. விஷால் நடித்த தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் இடம்பெற்ற ‘என் ஜன்னல் வந்த காற்றே’, மற்றும் வில்லு படத்தில் இடம்பெற்ற ‘தீம்தனக்கா தில்லானா ’போன்ற சில பாடல்களை பாடி இருக்கிறார்.



இதன் பின் 2016-ஆம் ஆண்டு கார்த்திக் என்ற கிரிக்கெட் வீரரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் தொகுப்பாளினி தியா மேனன். திருமணத்திற்கு பின்னர் இவர் சிங்கப்பூரில் செட்டில் ஆகினார். திருமணத்திற்கு பின்னர் டிவி பக்கம் வரமால் கொஞ்சம் பிரேக் எடுத்துக்கொண்டார் தியா.



இருப்பினும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் தியா அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வந்தார். 

மேலும் தற்போது தியாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக அவரின் குடும்பதினர் தெரிவித்துள்ளனர்.  

Advertisement

Advertisement