• Jul 25 2025

மார்பகத்தின் சைஸ் பற்றி விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்த விஜே ரம்யா- வைரலாகி வரும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமான VJ ரம்யா,  இவர் முன்னணி சேனல்களான சன் டிவி, விஜய் டிவி, ஜெயா டிவி போன்ற சேனல்களின் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது, பிரபலங்களை பேட்டி எடுப்பது மற்றும் படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது என பயங்கர பிசியாக இருக்கக்கூடியவர்.

மேலும் VJ ரம்யா திரைப்படங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். இவர் 2007 ஆம் ஆண்டு வெளியான மொழி படத்தில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி, அதன் பிறகு 2011ம் ஆண்டு மங்காத்தா படத்தில் ரிப்போர்ட்டர் ஆக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.


மேலும் ஓ காதல் கண்மணி எனும் படத்தில் நடிகர் துல்கர் சல்மானுக்கு தோழியாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார். இதனை அடுத்து கேம் ஓவர், ஆடை, மாஸ்டர், சங்கத் தலைவன் போன்ற நிறைய படங்களில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் சோசியல் மீடியாவில் ரொம்பவே ஆக்டிவாக இருக்கும் ரம்யா எப்போதுமே தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைப்பதில் மிக கவனம் செலுத்துபவர்.


இந்த நிலையில் மார்பகத்தின் சைஸ் பற்றி விமர்சிக்கும் சிலருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரம்யா சுப்ரமணியன் தற்போது வீடியோ வெளியிட்டு இருக்கிறார்."ஒரு பெண் உடலை விமர்சிக்காதீங்க, யாருடைய உடலையும் விமர்சிக்காதீர்கள். நீங்க மட்டும் சிரிச்சா அது ஜோக் இல்லை, none of your business" என அவர் பதிலடி கொடுத்து இருக்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது


Advertisement

Advertisement