• Jul 25 2025

வகுப்புவாத அரசியலுக்கு எதிராக வாக்களியுங்கள்: கர்நாடகா மக்களுக்கு பிரகாஷ் ராஜ் வேண்டுகோள்

Jo / 2 years ago

Advertisement

Listen News!

வகுப்புவாத அரசியலுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று கர்நாடக வாக்காளர்களுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி 224 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் காலை 7 மணிக்கே வாக்களிப்பதற்காக பெங்களூரு சாந்தி நகரில் உள்ள பள்ளிக்கு வந்து வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்.

இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், வகுப்புவாத அரசியலுக்கு எதிராக நாம் வாக்களிக்க வேண்டும். கர்நாடகம் அழகானதாக மாற வேண்டும்" என்று தெரிவித்தார்.

பாஜகவிற்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் நடிகர் பிரகாஷ் ராஜ் அவரது சமூகவலைதளப் பக்கங்களில் தொடர்ந்து கருத்துக்களைப் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement