• Sep 09 2025

தமிழும் சரஸ்வதியும் சீரியலை முதலில் வாங்கியது சன்டிவியா?-இப்படியொரு பிரச்சினையால் தான் விஜய் டிவிக்கு வந்திச்சா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் கோதைக்கு அர்ஜுன் மீது சந்தேகம் வர ஆரம்பித்து விட்டது. இதனால் கோதை எப்படி அர்ஜுன் பற்றிய உண்மைகளைக் கண்டு பிடிக்கப்போகின்றார் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.

இப்போது சீரியலின் கதைப்படி அர்ஜுனின் சதி வேலையால் ராகினி தற்பொழுது தன்னுடைய குடும்பத்தை எதிர்க்கும் அளவுக்கு துணிந்து விட்டார். இதனால் அண்ணா நகர்ல இருக்கும் வீட்டையும் எழுதி வாங்கிக் கொண்டார்.


அத்தோடு அர்ஜுன் கெட்டவன் என்பதை ராகினிக்கு நிரூபித்து ஆக வேண்டும் என்று கோதை மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார்.இப்படியான நிலையில் தற்பொழுது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. 


அதாவது தமிழும் சரஸ்வதியும் சீரியல் முதலில் ஒளிபரப்பப்படவிருந்தது சன் டிவியில் தானாம்.இருப்பினும் இந்த சீரியல் தயாரிப்பு நிறுவனமான விகடன் நிறுவனத்திற்கும் சன் தொலைக்காட்சிக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகத் தான் இந்த சீரியல் விஜய் டிவிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement