• Jul 24 2025

தளபதி 67 படத்திற்காக விஜய் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?-அதளபாதாளத்துக்கு போன ரஜினி அஜித்?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களாகவும் மாஸ் நடிகர்களாகவும் வலம் வருபவர்கள் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய். இவர்கள் 4 பேருக்குமே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இதில் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் சீனியர்கள் என்றாலும் வசூலில் அஜித்துக்கும் விஜய்க்கும் கடுமையான டஃப் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது ரஜினிகாந்த் விஜய் அஜித் ஆகியோரின் சம்பளம் குறித்த தகவலை பிரபல பத்திரிகையாளரான வலைப் பேச்சு பிஸ்மி வெளியிட்டுள்ளார். அதன்படி இந்த மூன்று பேரில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் உள்ளார்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 67 படத்தில் விஜய் நடித்து வருகின்றார்.


பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கும் இந்தப் படத்திற்காக நடிகர் விஜய் 125 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார் பத்திரிகையாளர் வலை பேச்சு பிஸ்மி.அத்தோடு தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்தான் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் இருக்கின்றார்.

இதேபோல் அவருக்கு அடுத்தப்படியாக நடிகர் அஜித் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உள்ளார். அடுத்ததாக தான் நடிக்கவுள்ள ஏகே 62 படத்திற்காக நடிகர் அஜித் 105 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக தெரிவித்துள்ளார் வலை பேச்சு பிஸ்மி. இது நடிகர் விஜய்யின் சம்பளத்தை விட 20 கோடி ரூபாய் குறைவாகும்.


ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்காக ரஜினிகாந்த் 80 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார் பிஸ்மி. 100 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கிய நடிகர் ரஜினிகாந்த், தற்போது தனது சம்பளத்தை 80 கோடி ரூபாயாக குறைத்துள்ளார் என்ற தகவலையும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement