• Jul 25 2025

எஸ்.ஏ.சி கமிட்டாகியிருந்த சீரியலிலிருந்து அதிரடியாக விலகிய சஞ்சீவ்... காரணம் விஜய் தானா..?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பான 'திருமதி செல்வம்' என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சஞ்சீவ். அத்தோடு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல சீரியல் ஒன்றிலும் இவர் நடித்திருந்தார். சீரியல்களில் மட்டுமல்லாது ஒரு சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். 


மேலும் விஜய் டிவியில் வெகு விரைவில் ராதிகா சரத்குமார் தயாரிப்பில் ஒளிபரப்பாக உள்ள சீரியல் ஒன்றில் நடிக்க இவர் ஒப்பந்தமாகி இருந்தார். ‌‌‌‌அதாவது எஸ் ஏ சந்திரசேகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த சீரியலில் பூவே பூச்சூடவா ரேஷ்மா உட்பட மேலும் பல பிரபலங்களும் நடிக்கின்றனர். சூட்டிங் தொடங்கிய ஒரே வாரத்தில் இந்த சீரியலில் இருந்து சஞ்சீவ் வெளியேற்றப்பட்டுள்ளார். ஜோடி பொருத்தம் சரியாக வராத காரணத்தினால் இவர் வெளியேற்றப்பட்டதாக கூறப்பட்டது.


இந்நிலையில் தற்போது மற்றோர் தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது விஜய்யின் நெருங்கிய நண்பர் தான் சஞ்சீவ். விஜய்க்கும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் இடையே நீண்ட காலமாகவே மனஸ்தாபம் ஓடிக்கொண்டிருப்பதாக ஒரு பேச்சும் உண்டு.


ஆகவே இப்படிப்பட்ட சூழலில் எஸ்.ஏ.சந்திரசேகருடன் இணைந்து நடிப்பது சரியாக இருக்குமா என்ற யோசனையில்தான் சஞ்சீவ் விலகிவிட்டார் எனவும் கூறப்பட்டு வருகின்றது. ஆனாலும் இது எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.


Advertisement

Advertisement