தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரான மணிரத்னம் இயக்கத்தில் மற்றும் இசைப்புயல் எ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான மாபெரும் வெற்றிப்படமே 'பம்பாய்'. இதில் கதாநாயகனாக அரவிந்தசாமியும் அவருக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலாவும் நடித்துள்ளனர்.
இப்படத்தினுடைய கதை மட்டும் அல்லாது பாடல்களும் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தன. அதாவது ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இப்படத்தில் இடம் பெற்ற பாடல்களும் பின்னணி இசையும் பல ஆண்டுகளைக் கடந்து இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்படத்தில் வரும் சம்பவங்கள் யாவும் பம்பாயில் 1992 முதல் 1993 வரை நடைபெற்ற கலவரங்களினையும், உண்மை சம்பவங்களினையும் மையமாக வைத்து பின்னப்பட்ட ஒரு கற்பனைகளின் தொகுப்பாகும். இத்திரைப்படம் ஆனது தமிழில் மட்டுமன்றி ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் மாற்றம் செய்து வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில் இப்படம் தொடர்பாக ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது அரவிந்த்சாமி இல்லையாம். அந்தவகையில், முதன் முதலில் இப்படத்தில் ஹீரோவாக மணிரத்தினத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் நடிகர் விக்ரம் தான் எனக் கூறப்படுகின்றது.
எனினும் அப்போது அவர் வேறு ஒரு படத்தில் கமிட்டாகி அப்படத்திற்காக வைத்திருந்த கெட்டப் காரணமாக இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதால், மணிரத்னம் விக்ரமுக்கு பதிலாக அரவிந்த்சாமியை ஹீரோவாக தேர்ந்தெடுத்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.
பிற செய்திகள்
- பொன்னியின் செல்வன் படத்தில் முதலில் விஜய் தான் நடிக்க இருந்தாரா?..அப்புறம் என்ன ஆச்சு!
- தமிழர்களின் அறியாமை பற்றிப் பேசிய கார்த்தி..என்ன கூறியுள்ளார் தெரியுமா?
- சூரியின் இடத்தைப் பிடித்த வேறொரு காமெடியன்… இப்படி ரூட் மாறீட்டீங்களே!
- ஜெயம் ரவியின் காதலி யார் தெரியுமா?…கண்டுபிடித்த ரசிகர்கள்
- “மணிரத்னம் சேர் தான் 30 வருடங்களாக எனக்கு பாஸாக இருந்து வருகின்றார்”…நெகிழ்ந்து பேசிய பிரபலம்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!