• Jul 25 2025

சம்பளம் கூட எதிர்பார்க்காமல் நண்பர்களாகவே வேலை செஞ்சிருக்கிறோம்- நன்றி தெரிவித்த நடிகர் மஹத்

stella / 2 years ago

Advertisement

Listen News!

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 3 , நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 70 வதாவது நாளில், நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியவர் மஹத்.பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின் தற்போது, 'கெட்டவனு பேர் எடுத்த நல்லவன்டா' , ' இவன் உத்தமன்' ஆகிய படங்களில் நாயகனாகவும், விஜய் டிவி தொலைக்காட்சியில் நடைபெற்று வரும், டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்தார்.

இவருக்கும் பெமினா மிஸ் இந்தியா, மிஸ் எர்த் ஆகிய உலக அழகி பட்டங்களை பெற்றுள்ள பிராச்சி மிஸ்ராவிற்கும்  திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு அண்மையில் குழந்தையும் பிறந்தது. திருமணத்தின் பின்னர் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் அவ்வப் போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் பதிவிட்டு வருவார்.


அந்த வகையில் இவர் தற்பொழுது லீட் ரோலில் காதல் கண்டிஷன் அப்லே என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட இவர் இப்படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் எல்லோருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார். அத்தோடு இப்படத்தில் என்னுடைய நண்பர்கள் அனைவருடனும் சேர்ந்து பணியாற்றியது மகிழ்ச்சியாக இருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement