• Jul 25 2025

நாங்கள் சில சமயங்களில் தான் பார்த்துக் கொள்கின்றோம்... திருமணமாகி 7ஆண்டுகளுக்குப் பின் ரகசியத்தை போட்டுடைத்த பென்னி தயாள் மனைவி..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் பென்னி தயாள். இவர் விஜய், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன், சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் சூப்பர்ஹிட் பாடல்களை பாடி அசத்தி இருக்கின்றார். அதுமட்டுமல்லாது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகின்றார்.


இவர் கடந்த 2016ஆம் ஆண்டு நியூயோர்க்கில் வசிக்கும் மாடல் ஆகிய கேத்ரின் பிலிப் என்பவரை மணந்தார். இத்தம்பதிகள் சமீபத்தில் அவர்களின் ஏழாம் ஆண்டு திருமண நிறைவு நாளை கொண்டாடி இருந்தனர். அவர்களின் திருமண நாளை முன்னிட்டு பென்னி தயாளின் மனைவி தங்களின் திருமணம் குறித்த மூன்று தகவல்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவை பின்வருமாறு,


1 . எனது பெயரில் உள்ள தயாள் என்பது எனது அதிகாரபூர்வமான கடைசி பெயர் இல்லை. நாங்கள் இருவரும் வெவ்வேறு நாட்டை சேர்ந்தவர்கள். எனவே எனது அனைத்து டாகுமெண்ட்களையும் மாற்றுவது என்பது மிகவும் கடினமான ஒன்று. 

அதனால் எனது பாஸ்போர்ட், OCI கார்டு, சோசியல் செக்யூரிட்டி கார்டு, டிரைவிங் லைசென்ஸ் என அனைத்திலும் எனது கடைசி பெயரை மாற்றாமல் அப்படியே கேத்ரின் பிலிப் என்றே தொடர்வது எனக்கு மிகவும் எளிதாக இருந்தது. அதிகாரப்பூர்வமாக நான் கேத்ரின் பிலிப் தான். ஆனால் எனது பணி நிமித்தமாக நான் கேத்ரின் தயாளாக மாறி இருக்கின்றேன். 


2 . எனது வீட்டில் நிதி நிர்வாகத்தை நானே நிர்வகிக்கிறேன். பென்னி மிகவும் பிஸியாக இருப்பதால் வீட்டிற்கு தேவையான அனைத்து யுடிலிட்டி பில்ஸ், கிராசரி  மற்றும் வீட்டுக்கு தேவையான அனைத்தையும் நானே எங்கள் வீட்டில் கவனித்து கொள்கிறேன். 

3 . மேலும் நாங்கள் இருவரும் வேலை காரணமாக வெகு தொலைவில் இருப்பதால் ஒருவரையொருவர் சில சமயங்களில் தான் பார்த்து கொள்ள நேரிடுகிறது. அதாவது ஒரு சில மாதங்கள் ஒன்றாக இருக்கும் சமயங்களில் அந்த நாட்களை மிகவும் சிறப்பாக அமைத்து கொள்வோம். 

இது போல இருக்க எங்களுடைய வாழ்க்கையில் நாங்கள் நிறைய தியாகம் செய்ய வேண்டி இருக்கிறது. அது அவ்வளவு எளிதானது அல்ல என்றாலும் நாங்கள் இருவரும் அந்த நேரங்களில் ஸ்ட்ராங்காக இருக்க முயற்சிக்கிறோம். 

இவ்வாறாக பென்னி தயாளின் மனைவி தங்களது வாழ்க்கை குறித்த 3ரகசியங்களை பகிர்ந்துள்ளார். 

Advertisement

Advertisement