• Jul 25 2025

சமீபத்தில் தானே சந்தித்து உரையாடினோம்- மனோபாலாவின் இறப்பிற்கு கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்த மதுரை முத்து

stella / 2 years ago

Advertisement

Listen News!

1953ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி நாகர்கோயிலில் பிறந்த மனோபாலா 1979ம் ஆண்டு புதிய வார்ப்புகள் படத்தில் உதவி இயக்குநராக பாரதிராஜாவிடம் வேலை செய்த நிலையில் ஒரு சிறிய காட்சியில் நடிகராகவும் தோன்றினார்.அதன் பின்னர் பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த மனோபாலா நகைச்சுவை நடிகராக பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து அசத்தினார்.

வடிவேலு, சந்தானம், விவேக் என பல முன்னணி நடிகர்களுடன் காமெடி காட்சிகளில் இணைந்து நடித்து பட்டையை கிளப்பிய மனோபாலாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் தமிழ் சினிமாவில் உள்ளனர்.1982ம் ஆண்டு ஆகாய கங்கை படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமான மனோபாலா, நான் உங்கள் ரசிகன், பிள்ளை நிலா, பாரு பாரு பட்டணம் பாரு, டிசம்பர் 31, சிறை பறவை, தூரத்து பச்சை, என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான் என பல படங்களை இயக்கி உள்ளார்.


நடிப்பு மற்றும் இயக்கத்தை தாண்டி சில நல்ல படங்களையும் மனோபாலா தயாரித்துள்ளார்.இந்த நிலையில் கல்லீரல் பிரச்சனை காரணமாக கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி  மனோபாலா உயிரிழந்து விட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.


இதனால் ரசிகர்கள் பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் காமெடி நடிகர் மதுரை முத்துவும் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது அதீத அன்பும் பாசமும் கொண்ட அண்ணன் மனோபாலா சமீபத்தில் சந்தித்து உரையாடினோம். சினிமா அறிவாளி நம்மளை விட்டு பிரிந்தார் ஆத்மா சாந்தியடையட்டும் என்று பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.






Advertisement

Advertisement