• Jul 26 2025

'நீங்கள் இறந்ததை எம்மால் நம்ப முடியவில்லை'.. 48வயது நடிகருக்காக போஸ்டர் ஒட்டி கண்ணீர் விடும் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

கன்னட திரையுலகின் பவர் ஸ்டார் என கொண்டாடப்பட்ட நடிகர் புனீத் ராஜ்குமாரின் உடைய 48-ஆவது பிறந்தநாள் இன்று. அவரின் வீட்டின் கடைக்குட்டியாக பிறந்த புனீத் ராஜ்குமாரின் இறப்பு அவரது குடும்பத்தை மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகம் மற்றும் திரை ரசிகர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. 


அதாவது புனீத் ராஜ்குமாருக்கு கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ஆம் தேதி காலை ஜிம்மில் ஒர்க்அவுட் செய்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். ஆனால் எதிர்பாராத விதமாக அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புனீத் இறந்த செய்தியை அறிந்த அவரின் ரசிகர்கள் மருத்துவமனை முன்பு கூடிவிட்டார். 


இதனால் அந்த சமயத்தில் அந்த பகுதியே மக்கள் வெள்ளமாக இருந்தது. அப்படி கோடானு கோடி மக்களின் அன்பை பெற்ற புனீத் ராஜ்குமாரின் இன்றும் ரசிகர்களால் மறக்க முடியாது. அந்தவகையில் அவரின் பிறந்தநாளான இன்று ரசிகர்கள் பல்வேறு நல்லகாரியங்களை செய்து வருகிறார்கள். 


அதாவது அவரின் சமாதிக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். அத்தோடு அவர் இறந்ததையே இன்னும் எம்மால் நம்ப முடியவில்லை எனவும் ரசிகர்கள் வேதனைப்படுகிறார்கள். மேலும் புனீத் ராஜ்குமார் வாழ்ந்த பெங்களூர் நகரில் திரும்பும் பக்கம் எல்லாம் அவரின் போஸ்டர் அல்லது பேனரை இன்றைய தினம் ஒட்டி வைத்துள்ளார்கள். 


அந்தவகையில் டாக்ஸிகள், ஆட்டோக்களிலும் புனீத் ராஜ்குமார் சிரித்த முகமாக இருக்கும் ஸ்டிக்கர்களை நாம் காண முடியும். குறிப்பாக காலையில் எழுந்து வெளியே சென்று விட்டு மாலை வீடு திரும்பினால் வழியில் நிச்சயம் குறைந்தது மூன்று முறையாவது புனீத் போஸ்டர் அல்லது ஸ்டிக்கர்களை நம்மால் காண முடியும். அந்தளவிற்கு தெருவெங்கிலும் பல போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். இவரின் பிறந்த தினமான இன்று இவரின் நினைவுகள் பலவற்றை மீட்டிப் பார்க்க வைத்திருக்கின்றது.

Advertisement

Advertisement