• Jul 25 2025

இந்திய படங்களை இனிமேல் எமது நாட்டில் ரிலீஸ் பண்ண மாட்டோம்... 'ஆதிபுருஷ்' படத்தால் அதிர்ச்சிகரமான முடிவெடுத்த நாடு..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

ராமனாக பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக சைப் அலி கான், லட்சுமணனாக சன்னி சிங் ஆகியோர் வால்மீகி எழுதிய ராமாயணத்தை தழுவி எடுக்கப்பட்ட 'ஆதிபுருஷ்' என்ற படத்தில் நடித்துள்ளனர். ஓம் ராவத் இயக்கியுள்ள இந்த படம் ஆனது கடந்த ஜூன் 16 ஆம் தேதி தியேட்டரில் வெளியானது. 


மேலும் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒரே நேரத்தில் 5 மொழிகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே கடும் விமர்சனங்களையும் பெற்று வந்தது. இதற்கு ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்புத் தெரிவித்தும் பலரும் தங்களது கருத்துக்களை முன்வைத்து வந்திருந்தனர்.


இந்நிலையில் ஆதிபுருஷ் திரைப்படத்தில் வந்த சீதா கதாபாத்திரம் ஆனது நேபாள் நாட்டு மக்களின் மனதை காயப்படுத்தும் வகையில் இருப்பதாக கூறப்படுகின்றது. இதன் காரணமாக இனி எந்தவொரு இந்திய திரைப்படங்களையும் நேபாளில் வெளியிட மாட்டோம் என அந்த நாடு தடை செய்துள்ளது.


நேபாளில் வெளியாகிற பான் இந்தியத் திரைப்படங்கள் பல கோடிக்கணக்கில் வசூலினை வாரிக்குவித்து வருகின்ற நிலையில் இப்படியொரு அதிர்ச்சி முடிவை அந்த நாடு எடுத்துள்ளமை பலருக்கும் ஆச்சர்யத்தைக் கொடுத்துள்ளது.

Advertisement

Advertisement