• Jul 25 2025

பார்க்க கூடாததை பார்த்துவிட்டோம்... இனி இந்த பக்கம் வரமாட்டோம்... பயத்தில் பதறும் போட்டியாளர்கள்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் நேற்றைய தினம் பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்ட ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் மொத்தமாக 18 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர். இதனால் இதில் யார் டைட்டில் வின்னர் ஆகப் போகின்றார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர்.

இப்படியான நிலையில் முதல் நாளிலே வாரத்தலைவராக இருக்கும் விஜய் வர்மாவைக் கவராத போட்டியாளர்கள் என பிக்பாஸ் 6 போட்டியாளர்களின் பெயரை அறிவிக்கின்றார். அவர்களை பிக் பாஸ் இன்னும் ஒரு வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார். 


இதட்கிடையில் மணி, வினுஷா, பாண்டியன்ஸ் ஸ்டோர்ஸ் கண்ணன் 3 பேரும் அந்த இன்னொரு வீட்டை பார்க்கணும் என்று அங்கு மறைத்து வைத்திருந்த செயற்கை செடிகளை பிய்த்து அதனுள் இருந்த விடையத்தை பார்த்து விட்டு பிறகு பயத்தில் கேமிரா முன் வந்து கதறிக்கொண்டு இருக்கிறார்கள்.

பிக் பாஸ் நாங்க பார்க்க கூடாததை பார்த்துவிட்டோம் அங்கே ஒரு வீடு இருக்கு ,நாங்க யாரிடமும் சொல்ல மாட்டோம் என்று சொல்லி மறுபடி அந்த செட்டப் எல்லாம் ஒட்டி வைத்து விட்டு இந்த பக்கமே வரமாட்டோம் என்று கிளம்பி விட்டார்கள்.


பிக் பாஸ் வீட்டுக்குள்ள போன முதல் நாளே அடாவடிகளை ஸ்டார்ட் பண்ணிட்டாங்க இனி பிக் பாஸ் என சொல்ல போகிறார் என்று பார்ப்போம் .

Advertisement

Advertisement