• Jul 26 2025

52 வயதிலும் என்ன ஒரு லுக்... இளம் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் சுகன்யாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

90களில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து முன்னணியில் விளங்கியபவர் நடிகை சுகன்யா.இவர் தமிழ் சினிமாவில் 1991 ஆம் ஆண்டு “புது நெல்லு புது நாத்து ” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் சின்னகவுண்டர், கோட்டைவாசல், செந்தமிழ் பாட்டு, வால்டர் வெற்றிவேல், கருப்பு வெள்ளை, தாலாட்டு, கேப்டன், வண்டிச்சோலை சின்ராசு, மகாநதி, மிஸ்டர் மெட்ராஸ், மகாபிரபு, இந்தியன், சேனாபதி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.



இவர் கடந்த 2002-ம் ஆண்டு ஸ்ரீதர் ராஜகோபால் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமண வாழ்க்கை ஓராண்டு மட்டுமே நீடித்தது.அத்தோடு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2003-ம் ஆண்டே இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். இதன்பின்னர் திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாகவே வாழ்ந்து வருகிறார் நடிகை சுகன்யா. திருமணத்துக்கு பின்னர் இவர் சினிமாவில் நடிப்பதையும் படிப்படியாக குறைத்துக் கொண்டார்.



தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்து வந்த இவர், தற்போது மீண்டும் நடிப்பில் பிசியாகி வருகிறார். எனினும் தற்போது நவரச நாயகன் கார்த்திக்கு ஜோடியாக தீ இவண் படத்தில் நடித்து முடித்துள்ளார் சுகன்யா. இப்படத்தின் பின்னணி பணிகள் தற்போது பிசியாக நடைபெற்று வருகிறது. விரைவில் ரிலீசாக உள்ளது.



அதேபோல் இந்தியன் 2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக . எனினும் தற்போது 52 வயதாகும் சுகன்யா, இந்த வயதிலும் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் செம்ம யங்காக காட்சி அளிக்கிறார். அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.



Advertisement

Advertisement