• Jul 24 2025

என்ன ஒரு படம் கலக்கிட்டீங்க- லவ்டுடே படத்தைப் பார்த்து மெய் சிலிர்த்துப் போன இயக்குநர் அட்லி

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் தானே இயக்கி நடித்திருந்த திரைப்படம் தான் லவ் டுடே . இப்படத்தில் சத்தியராஜ் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடிகை இவானா கதாநாயகியாகவும் நடித்திந்தார்.இவர்களுடன்  ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர்.

ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கடந்த நவம்பர் 4, 2022 ஆம் தேதி முதல் வெளியாகி  ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 2022 ஆம் ஆண்டில் வெளிவந்த படங்களின் வசூலில் முதல் 5 இடத்தில் நுழைந்து சாதனை படைத்துள்ளது என‌ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த வாரம் தெலுங்கிலும் இந்த படம் வெளியாகி உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிலம்பரசன் ஆகியோரும் இந்த படத்தினை பாராட்டி இருந்தனர். இதனையடுத்து இந்த படம் தற்போது பிரபல நெட்பிளிக்ஸ் ஓடிடியில் டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது.

இந்நிலையில் இந்த படத்தினை பார்த்த இயக்குநர் அட்லி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், என்ன ஒரு FUN ஆன திரைப்படம்.. மிகவும் பிடித்திருந்தது. வாழ்த்துகள் ஏஜிஎஸ், அர்ச்சனா கல்பாத்தி, பிரதீப் ரங்கநாதன் ப்ரோ கலக்கிட்டீங்க. ராதிகா & சத்யராஜ் சார் ❤️. யுவன் ஷங்கர் ராஜாவின் லவ்லி ஒர்க்!  படத்தின் ஒளிப்பதிவு அற்புதம்" என அட்லி டுவீட் செய்துள்ளார்.

Advertisement

Advertisement