• Jul 26 2025

ரசிகர் உயிரிழந்த சோகத்தில் நடிகர் அஜித் செய்த விஷயம்..தீயாய் பரவும் தகவல்...!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புடன் அஜித்தின் துணிவு திரைப்படம் 11 -ம் தேதி வெளியானது. 

மேலும் இப்படத்தின்  முதல் காட்சி 1 மணிக்கு திரையிடப்படும் என்று அறிவித்ததால் படத்தை பார்க்க ரசிகர்கள் இரவு முதலே தியேட்டர் முன்பு  குவிந்தனர்.



சென்னை ரோகினி தியேட்டர் முன்பு சென்று கொண்டிருந்த லாரி மீது பரத் குமார் என்ற அஜித் ரசிகர் ஒருவர் நடனமாடியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தடுக்கி கீழே விழுந்துவிட்டார். 


இதனால் முதுகுத்தண்டில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். அத்தோடு இந்த செய்தி பலரையும் அதிர்ச்சி அடைய செய்தது.



இவ்வாறுஇருக்கையில் அஜித் குமார் அவரின் ரசிகர் இறந்ததை நினைத்து மிகவும் வேதனை பட்டாராம். இதனால் தான் அவர் துணிவு படத்தின் வெற்றியை கூட பெரிதாக கொண்டாடவில்லை என்று ஸ்டண்ட் இயக்குனர் சுப்ரிம் சுந்தர் கூறியுள்ளார்.


Advertisement

Advertisement