• Jul 25 2025

ஹாஸ்பிட்டலில் இருந்து வீட்டுக்கு வந்ததும் ஐஸ்வர்யா செய்த காரியம்- கடுப்பாகிக் கிளம்பிய கதிர்- அவமானபட்டு நின்ற கண்ணன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

ஹாஸ்பிட்டலுக்கு பணம் கட்டுவதற்காக பணம் எடுக்கப் போன கண்ணன் இன்னும் வராததால் கார் தானே பணத்தைக் கட்டுகின்றார். பின்னர் கண்ணன் வந்ததும் தான் பணத்தைக் கட்டிய விஷயத்தைச் சொல்ல கண்ணன் மகிழ்ச்சியடைகின்றார். பின்னர் கதிர் தன்னுடைய காரிலேயே ஐஸ்வர்யாவைத் தன்னுடைய வீட்டுக்கு கொண்டு போய் விடுகின்றார்.


வீட்டுக்கு வந்ததும் ஐஸ்வர்யா கதிரையும் வைத்துக் கொண்டு வீடியோ எடுக்க கதிர் திட்டி விட்டு ரெஸ்ட் எடுக்கச் சொல்கின்றார்.பின்னர் கண்ணனை தனியாகக் கூப்பிட்டு தன்னிடம் இருந்த பணத்தையும் கொடுத்து விட்டுச் செல்கின்றார். பின்னர் கதிர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது முல்லையிடம் தான் பணம் கட்டிய விஷயத்தைச் சொல்கின்றார்.

இதனால் முல்லை எதற்காக இப்படிப் பண்ணினீங்க அவங்ளே அவங்க லைப்பை பார்த்துக் கொள்ளுவாங்க தானே என சொல்ல மூர்த்தி அண்ணன் இதைப் பார்த்தால் கவலைப்படுவார் அவருக்காகத் தான் இதைப் பண்ணினேன் என்று கூறுகின்றார்.பின்னர் ஐஸ்வர்யா தனக்கு மட்டன் சாப்பிட வேண்டும் போ இருக்கு என்று கூற கண்ணன் மட்டன் வாங்கப் போகின்றார்.


அங்க ஒரு கிலோ மட்டன் ஆயிரம் ரூபா என்று சொன்னதும் கண்ணன் அதிர்ச்சியடைந்து விலையைத் திரும்ப திரும்ப கேட்கின்றார்.இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement