• Jul 24 2025

வேணும்னே பண்றான்...பிக் பாஸ் வீட்டில் சண்டையிடும் தன் அண்ணன் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் சொன்ன விஷயம் ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் வீட்டிற்கு போய் என் அண்ணன் மாறிவிட்டன் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் அளித்திருக்கும் பேட்டி தற்போது சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் திரைப்பட நடிகை மட்டும் இல்லாமல் நடன கலைஞர், தொகுப்பாளினி என பன்முகம் கொண்டு படிப்படியா வழந்து வந்தவர்.  இவர் 2011 ஆம் ஆண்டு வெளியான ‘அவர்களும் இவர்களும்’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்

எனினும் இதனை தொடர்ந்து இவர் அட்டகத்தி, காக்கா முட்டை, தர்மதுரை, குற்றமே தண்டனை, ரம்மி, கனா உட்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். அதிலும் கனா படம் மூலம் தான் இவருக்கு நல்ல பெயர் ஏற்படுத்தி தந்தது. அத்தோடு , இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவிலும் பிஸியான நடிகையாக திகழ்ந்து வருகிறார்.அதாவது தெலுங்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற படத்தில் சுவர்ணா என்ற கேரக்டரில் நடித்திருந்தார் .

மேலும் இந்த படத்தில் விஜய் தேவர்கொண்டா கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படம் மூலம் ஐஸ்வர்யா பிரபலமான நடிகையாக திகழ்கிறார். அத்தோடு, சமீப காலமாக இவர் பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் டிரைவர் ஜமுனா என்ற படத்தில் நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தை வத்திக்குச்சி பட இயக்குனர் கின்ஸ்லி இயக்கியிருக்கிறார்.


ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மேலும்  இந்த படம் வரும் நவம்பர் 11ஆம் தேதி திரையரங்கில் வெளியாகியிருக்கிறது என்று தெரிவித்து இருந்தார்கள். ஆனால், இந்த படம் இன்று வெளியாகவில்லை. திடீரென படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இது தொடர்பாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்திருந்தார். அப்போது ஐஸ்வர்யாவிடம் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அவருடைய அண்ணன் மணிகண்டனை குறித்து கேள்வி கேட்டிருந்தார்கள்.

அதற்கு ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்திருந்ததாவது, உண்மையாகவே புஜ்ஜி ஒரு Funனான பர்சன் தான் . ஆனால், பிக் பாஸ் வீட்டில் ரொம்ப சீரியஸாக இருக்கான். அது ஏன் என்று தெரியவில்லை? இரண்டு நாளைக்கு முன்னாடி கூட அவன் சண்டை போட்டிருந்தான். அது புஜ்ஜியோட கேரக்டரே கிடையாது. ஒருவேளை பிக் பாஸ் வீட்டிற்கு போனால் அப்படி மாறிடுவாங்களா? அல்லது அவன் வேணும்னே பண்றான்னும் டவுட்டா இருக்கு என்று கூறியிருந்தார்.  ஐஸ்வ்ர்யா சொல்வதை வைத்து பார்க்கும் போது அவர் நிச்சயம் மணி, தனலட்சுமி சண்டையை தான் சொல்லி இருக்கிறார் என்றே தெரிகிறது.அத்தோடு பிக்பாஸ் குறித்து நான் ஒன்றும் கூறிவிடவில்லை.ஆனால் அவனுடைய நண்பர்கள் நிறைய அட்வைஸ் கொடுத்து இருந்தார்கள்.

Advertisement

Advertisement