• Jul 25 2025

லிப்லாக் பற்றி அமலா பால் சொன்ன விஷயம்...ஷாக்கான ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

மலையாள நடிகர் பிரித்விராஜ், நஜீப் முகமது என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ஆடு ஜீவிதம்.இதில் நடிகை அமலா பால் பிரித்விராஜின் மனைவியாக நடித்துள்ளார். இப்படத்தில் ஆஸ்கார் வின்னர்களான ஏ ஆர் ரகுமான் மற்றும் ரசூல் குட்டி ஆகிய இருவரும் பணியாற்றி உள்ளனர்.

மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய 'ஆடு ஜீவிதம்'என்ற நாவலை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. அத்தோடு கடனை அடைப்பதற்கான சவூதி செல்லும் பிரித்விராஜ், அங்கு ஆடு மேய்ப்பவராக மாறுகிறார். அதைத் தொடர்ந்து அவரது வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதுதான் ஆடு ஜீவிதம் படத்தின் கதை.

மேலும் இத்திரைப்படத்தில் டிரைலர் அண்மையில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. மூன்று நிமிடம் ஓடக்கூடிய அந்த டிரைலரில் பிரித்விராஜ் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். பாலைவனத்தில் கஷ்டப்படும் பிரித்விராஜின் உணர்ச்சிமயமான காட்சிகள் மனதை பிசைகின்றன. மேலும், இந்த டிரைலரில் ஹாட்டான முத்தக்காட்சி இடம் பெற்று இருந்து.


 இந்த லிப் லாக் காட்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து அதிரடியாக பதில் அளித்துள்ள அமலா பால், இந்த படத்தின் கதையை சொல்லும் போதே பிரித்விராஜ், உதட்டு முத்தக்காட்சி பற்றி விளக்கமாக கூறினார். படத்திற்கும், கதைக்கும் அந்த முத்தக்காட்சி மிகவும் முக்கியமானது என்பதால் நான் நடித்தேன். 

அத்தோடு , கதைக்கு தேவை என்பதற்காக நிர்வாணமாகவே நடித்திருக்கிறேன். லிப்லாக் காட்சி எல்லாம் ஒரு விஷயமே இல்லை என்று அதிரடியாக பதில் அளித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார் அமலா பால்.

ஆடு ஜீவிதம் திரைப்படம் அக்டோபர் 20ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.மேலும்  இப்படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். ரசூல் பூக்குட்டியின் சவுண்ட் டிசைனில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் சுனில் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகியுள்ளது. தேசிய விருது பெற்ற பிளெஸ்ஸி இயக்கத்தில் உருவாகிய இந்த படமும் நிச்சயம் தேசிய விருது வெல்லும் என்று நம்பப்படுகிறது.

Advertisement

Advertisement