• Jul 25 2025

நடுச்சாமத்தில் போர்வைக்குள் இருக்கும் ஆணுடன் ரகசியம் பேசும் ஜனனி... என்னம்மா பண்ணுறீங்க..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசன் ஆனது கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது வெற்றிகரமாக நான்காவது வாரத்தை கடக்க உள்ளது. இதில் போட்டியாளர்களிடையே நாளுக்கு நாள் சண்டை, கோபம், அழுகை என உணர்ச்சிகளும் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன.


குறிப்பாக இந்நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் பங்குபற்றிய நிலையில் தற்போது 18 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர். அதில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத போட்டியாளர்களாக ஆரம்பத்தில் தனலட்சுமி, அசீம் ஆகியோர் இருந்தனர். ஆனால் அடுத்தடுத்த வாரங்களில் அனைவரும் தங்களுடைய உண்மை முகத்தைக் காட்டத் தொடங்கி இருந்தனர்.

அதாவது அந்த வீட்டில் ரொம்பவே அமைதியாக இருந்த போட்டியாளர்களில் ஒருவராக இருந்தவர்கள் குயின்ஷி, மற்றும் ஜனனி ஆகியோர். ஆனால் கடந்து வந்த ஓரிரு நாட்களாக இவர்களும் தங்களுடைய உண்மை முகத்தைக் காட்டத்தொடங்கி விட்டனர்.


அந்தவகையில் குயின்ஷி, ஜனனி ஆகியோருக்கிடையில் உடையினால் ஒரு சிறு தகராறு ஏற்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து கோபத்தில் ஜனனி தனது கையில் இருந்த கிளாஸினை எறிந்து உடைத்து விட்டார். இந்த வீடியோ ஆனது சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது ஜனனி குறித்த மற்றுமோர் வீடியோ ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதில் நடு சாமத்தில் போர்வைக்குள் இருக்கும் அமுதவாணனுடன் எதோ ரகசியம் பேசுகின்றார். பின்னர் பேசி முடிந்ததும் யாருக்கும் தெரியாமல் தனது கட்டிலில் போய்ப் படுத்துக் கொள்கின்றார்.இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த நேரத்தில் என்ன ரகசியம் பேச இருக்கிறது எனக்கேட்டு திட்டித் தீர்த்து வருகின்றனர்.


Advertisement

Advertisement