• Jul 25 2025

என்ன பாய்ஸ் பிரண்ட்ஸ் கூட ஊர் சுத்திட்டு இருக்கிறியா?- மகளின் செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்த வனிதா

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு வனிதா பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார். தற்போது இவர் படங்கள், சீரியல்கள் என எதையும் விட்டு வைக்காமல் எதாவது ஒன்றில் நடித்து வருகின்றார்.அனல்காற்று, அந்த கண், சிவப்பு மனிதர்கள், கொடூரன், தில்லிருந்தா போராடு, பிக் கப் டிராப் உட்பட பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.


மேலும், இவர் நடிப்பைத் தாண்டி யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதில் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். இதுமட்டுமில்லாமல் இவர் அழகு சாதன செய்கிறார்கள். விற்பனை செய்யும் அங்காடி ஒன்றை கடந்த ஆண்டு தொடங்கினார். இப்படி வனிதா அவர்கள் பல்வேறு தொழில்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே இவர் 2020 ஆண்டு பீட்டர் பவுல் என்பவரை மூன்றாவது திருமணம் செய்துக்கொண்டார்.


பீட்டர் பவுல் சினிமாவில் எடிட்டிங் கலைஞராக இருந்தவர். இவர்களுடைய திருமணம் குறித்து பல சர்ச்சைகள் சோசியல் மீடியாவில் எழுந்திருந்தது. ஆனால், திருமணம் ஆன சில நாட்களிலேயே , பீட்டர் பவுலுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள். பின் சமீபத்தில் பீட்டர் பவுல் திடீர் மரணமடைந்தார். இது ஒரு பக்கம் இருக்க வனிதா எப்போதும் இணையத்தில் வீடியோவை பகிர்ந்து வருவார். இந்த நிலையில் வனிதா விஜயகுமார் தன்மகள் குறித்து வீடியோ ஒன்றை வெளியீட்டு இருக்கிறார்.


அந்த வீடியோவில், வனிதா அவர்கள் தன் மகள் ஜோவிகா மற்றும் அவருடைய நண்பர்களுடன் வெளியே சென்றிருக்கிறார். அப்போது மகளிடம் வனிதா, என்ன பாய்ஸ் பிரண்ட்ஸ் எல்லாம் , ஊர் சுத்திட்டு இருக்கிறியா? என்று கேட்கிறார். அதற்கு அவருடைய மகள், நான் ஊர் சுத்துறேனா? என்று கேட்கிறார். அதற்கு பிறகு வனிதா, எல்லாம் எனது பிள்ளைகள்  மாதிரி அவர்களுக்கு பிடித்த ஸ்கிரீம் சாக்லேட் வாங்கி கொடுக்கிறார். தற்போது இந்த பதிவுதான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


Advertisement

Advertisement