• Jul 25 2025

காணாமல் போன நடிகை ஷாலு ஷம்முவின் தொலைபேசி... பின்னணியில் மர்மம்.. நடந்தது என்ன..? கசிந்த தகவல்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த மாதம் நடிகை ஷாலு ஷம்மு எம்.ஆர்.சி நகரில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடந்த பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார். ஆனால் அந்தப் பார்ட்டி முடிய தாமதமான காரணத்தால் சூளைமேட்டில் உள்ள தன் நண்பர் வீட்டில் அன்றிரவு தங்கியுள்ளார். 

பின்னர் மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது, தனது ரூ.2 லட்சம் மதிப்பிலான ஐ போன் காணவில்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது ஸ்விச் ஆப் என்று வந்ததால், பதறிப்போன ஷாலு, நண்பர்களிடம் விசாரித்துவிட்டு உடனடியாக நட்சத்திர ஓட்டலுக்கு சென்று தேடி உள்ளார். 


இருப்பினும் நட்சத்திர ஓட்டலிலும் செல்போன் கிடைக்காததால், பட்டினப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துவிட்டு, அந்தப் புகாரில் நண்பர்கள் சிலர் மீது சந்தேகம் இருப்பதாகவும் கூறியிருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் அவரின் நண்பர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், ஷாலு ஷம்முவின் வீட்டுக்கு வந்த பார்சலில் ஐபோன் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.


பின்னர் ஷாலு ஷம்மு தான் சந்தேகப்பட்ட நபர் தான், தனது போனை திருடியதாகவும் எட்டு வருட நட்பு அர்த்தமற்றுப் போனதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவினைப் பகிர்ந்து இருந்தார். இந்நிலையில் தற்போது இந்தத் திருட்டுக்கான காரணம் வெளியாகி இருக்கின்றது. அதாவது 


நடிகை ஷாலு ஷம்முவை பழிவாங்கும் நோக்கத்தோடு அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் அந்த ஐபோனை திருடி, அந்த போனில் இருந்த சில வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுத்துவைத்துக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஷாலு ஷம்முவை பழிவாங்கத்தான் அந்த நபர் ஐ போனை திருடியதாவும், இதுகுறித்தும் ஷாலு காவல்நிலையத்தில் புகார் அளிக்க இருப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் ஒரு விடயம் கசிந்துள்ளது.

Advertisement

Advertisement