• Jul 23 2025

ஆசை ஆசையாக 'மாவீரன்' படம் பார்க்க வந்து... யூடியூப்பரால் கடுப்பான அதிதி... நடந்தது என்ன..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன் திரைப்படம் இன்றைய தினம் உலகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அந்தவகையில் சென்ற ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான ப்ரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில் மாவீரன் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.


மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள இப்படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, மிஸ்கின்,யோகி பாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இந்நிலையில் இன்றைய தினம் வெளியாகியுள்ள இப்படத்தைப் பார்ப்பதற்காக ரசிகர்கள், பிரபலங்கள் எனப் பலரும் தியேட்டர்களில் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். அந்தவகையில் அதிதி ஷங்கரும் தியேட்டருக்கு சென்று ரசிகர்களுடன் மாவீரன் படத்தை பார்க்க வந்திருந்தார்.


இவ்வாறாக தியேட்டருக்கு வந்து ஆசையாக தான் நடித்த 2வது படத்தை பார்க்க சீட்டில் அமர்ந்த உடனே "படம் எப்படி இருக்கு மேடம்" என ஒரு யூடியூபர் மைக்கை நீட்டியுள்ளார். இதனால் கடுப்பான அதிதி சங்கர் "படமே இன்னும் போடல, படத்தை பாருங்க, என்ஜாய் பண்ணுங்க, ப்ளீ ஸ், கிளம்புங்க" என்பது போல பேசி இருக்கின்றார். இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement