• Jul 25 2025

இயக்குநர் நாகாவுக்கு என்னாச்சு? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த குடும்பத்தினர்

Jo / 2 years ago

Advertisement

Listen News!

மர்மதேசம் சீரியல் மூலம் பிரபலமானவர் இயக்குநர் நாகா.சமீபத்தில்  ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு மயங்கி விழந்ததால் அதிர்ச்சிக்குள்ளாகிய படக்குழுவினர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நாகாவுக்கு ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்து ஓய்வில் இருக்கும்படி அறிவுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில் திடீரென இயக்குநர் நாகா இறந்துவிட்டதாக செய்திகள் பரவின. கட்டுத் தீபோல பரவிய இந்த செய்தியால் ரசிகர்களும் அதிர்ச்சிக்குள்ளாகினர். ஆனால், இது முற்றிலும் வதந்தி என பின்னர் தெரியவந்துள்ளது. 

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நாகாவின் குடும்பத்தினரே விளக்கம் கொடுத்துள்ளனர். அதன்படி, நாக உயிரிழந்ததாக பரவிய செய்தியில் துளியும் உண்மையில்லை எனவும், நாகாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement