• Jul 24 2025

பிரியங்காவிற்கு என்ன ஆச்சு..? மருத்துவமனையில் திடீர் அனுமதி.. கவலையில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தொகுப்பாளர்களில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்று இன்று வரை மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றவர் தான் பிரியங்கா. அதுமட்டுமல்லாது பிக்பாஸ் சீசன் 5ல் கலந்துகொண்டதுடன் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டார்.


இதனை தொடர்ந்து, கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர்ஸ், ஸ்டார்ட் ம்யூசிக், தி வால் என பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இன்று மக்களின் மனதில் நீங்காத ஒரு இடத்தை பிடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின், ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்தபடி, மீண்டும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு தொகுப்பாளினியாக களமிறங்கினார். அதுமட்டுமல்லாது மா.கா.பா வுடன் இணைந்து மேலும் பல ரியாலிட்டி ஷோக்களை நிகழ்த்தி வருகின்றார்.


இந்நிலையில் இவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கு காரணம் food poison தான் எனக் கூறப்படுகின்றது. இதனை பிரியங்கா தானே தனது சமூக வலைத்தள பங்கங்களின் மூலமாக தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் சில மணி நேரங்களில் அந்த பதிவை உடனே டெலிட் செய்து விட்டார்.


மேலும் பிரியங்காவிற்கு இப்படி அடிக்கடி food poison ஆகிறது என்பது வழக்கமான ஒன்றாகி விட்டது. இதற்கு முக்கிய காரணமே இவரது உணவுப் பழக்க வழக்கத்தில் உள்ள பிரச்சினை தான். இதனைத் தொடர்ந்து இவர் சீக்கிரம் குணமடைந்து வரவேண்டும் எனக் கூறி ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement