• Jul 25 2025

ரத்தம் வடிய வடிய அதைப் பண்ணினேன்... தற்கொலை செய்ய முடிவெடுத்த சாந்தனு... நடந்தது என்ன..?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் சாந்தானு நடிப்பில் தற்போது 'இராவண கோட்டம்' படம் தயாராகி வருகின்றது. இப்படத்தை கண்ணன் ரவி தயாரித்துள்ளார். மேலும் இதில் சாந்தனுவுக்கு ஜோடியாக நடிகை கயல் ஆனந்தி நடித்துள்ளார். அத்தோடு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். 

இந்நிலையில் இப்படத்தின் உடைய டீசர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது. அந்தவகையில் ராவண கோட்டம் பட நிகழ்ச்சியில் சாந்தனு பல விடயங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.


அதாவது ''இந்த படத்தின் தயாரிப்பாளர் கண்ணன் ரவி எனது தந்தையின் நண்பர் என்பதால் தயாரிப்பு பொறுப்புகளை என்னிடம் ஒப்படைத்து இருந்தார். படப்பிடிப்பில் நிறைய பிரச்சினைகள் எங்களுக்குள் வந்தன. 30 நாட்களுக்கு ஒதுக்கிய தொகை 19 நாட்களிலேயே ஒண்ணும் இல்லாமல் காலியானது. மாடு பார்த்தவருக்கு ஆயிரம், கயிறு கொண்டு வந்தவருக்கு ஆயிரம், மாட்டை பிடித்து வந்தவருக்கு இரண்டாயிரம், மாட்டை கொண்டு வந்த வண்டிக்கு ஐந்தாயிரம் என்றெல்லாம் பில் இருந்தது. 


இப்படி எனக்குள் நிறைய கஷ்டங்கள். ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொள்ளலாமா என்ற எண்ணமும் எனக்கு வந்தது. பணத்துக்காக மனிதர்கள் எப்படி மாறுகிறார்கள் என்பதை நான் அதன் வாயிலாக கற்றேன். எங்களுடன் இணைந்து பணியாற்றிய சக நடிகர் நடிகைகள் தொழில் நுட்ப கலைஞர்கள் சம்பளத்தை குறைத்துக்கொள்ள சம்மதித்தனர்" என்றார்.


மேலும் "படப்பிடிப்பில் காலில் ரத்தம் வர நடித்தேன். கதாபாத்திரத்துக்காக செருப்பு போடாமல் லுங்கி கட்டிக்கொண்டு திரிந்தேன். கருவேல மர அரசியல், தூவல் கலவரம், காதல் போன்ற விஷயங்கள் படத்தில் இருக்கும். படம் சிறப்பாக வந்துள்ளது. எனது சினிமா வாழ்க்கையில் இது முக்கிய படமாக இருக்கும்'' எனவும் கூறியுள்ளார் நடிகர் சாந்தனு.

Advertisement

Advertisement