• Jul 25 2025

நடு ராத்திரியில் கதறி அழுது கூச்சலிடும் கண்ணம்மா... தனியாகப் படுத்துத் தூங்கும் பாரதி... ஓடி வந்த சௌந்தர்யா... நடந்தது என்ன..? ப்ரோமோ வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடும் சீரியல்களில் ஒன்று தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுளளது என்ன நடைபெறவுள்ளது என்பது குறித்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 


அதில் நடு ராத்திரியில் பாரதியும், கண்ணம்மாவும் கூடாரம் ஒன்றிற்குள் படுத்துத் தூங்குகின்றனர். அப்போது கண்ணம்மா ஒரு கனவு கண்டு கதறி அழுது கூச்சலிடுகின்றார். அந்த சமயத்தில் திடீரென எழுந்த பாரதி கண்ணம்மாவிடம் "என்ன ஆச்சு" எனக் கேட்கின்றார். அதற்கு கண்ணம்மா "என்னை மன்னிச்சுடு பாரதி, எனக்கு சின்ன வயசில் இருந்து இதுதான் பிரச்சினை, என்னால ஒரு ஆணுடைய நெருக்கத்தை ஏற்றுக்கவே முடியாது" என்று கூறுகின்றார். 


பின்னர் பாரதி தான் வெளியே போய் படுத்துகிறேன் எனக்கூறிவிட்டு வெளியே போய் கொசுக்கடியில் படுத்துத் தூங்குகின்றார்.  இவை எல்லாவற்றையும் கண்ணம்மாவின் கதறல் சத்தம் கேட்டு ஓடி வந்த சௌந்தர்யா தூரமாக நின்று பார்த்துவிட்டு செல்கின்றார்.

இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது.


Advertisement

Advertisement